மார்ச் 3: மிகவும் எதிர்பார்த்த ரியல்மி 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
ரியல்மி 3 ஸ்மார்ட்போனில் 24எம்பி+16எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ரியல்மி 3 ஸ்மார்ட்போன் வரும் மார்ச் 3-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கம்போல் இந்த ஸ்மார்ட்போனிலும் டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன்
இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:
ரியல்மி 3 ஸ்மார்ட்போனில் 24எம்பி+16எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைட்-ஆங்கிள் லென்ஸ் இதில் பொறுத்தப்பட்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 4கே வீடியோ பதிவு ஆதரவு
மற்றும் அதிகளவு எம்பி கொண்ட செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் ஆதரவு, செயற்கை நுண்ணறிவு அம்சம் போன்ற பல்வேறு சிறப்பு வசதிகள் இதில் உள்ளது.

மீடியாடெக்:
இந்த ரியல்மி 3 ஸ்மார்ட்போன் மாடல் மீடியாடெக் ஹீலியோ பி70 சிப்செட் வசதியை கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது, எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சேமிப்பு:
ரியல்மி 3 ஸ்மார்ட்போன் மாடல்
4ஜிபி ரேம் 64ஜிபி உள்ளடக்க மெமரி
6ஜிபி ரேம் 128ஜிபி உள்ளடக்க மெமரி
8ஜிபி ரேம் 128ஜிபி உள்ளடகடக மெமரி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டரி:
இந்த ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு வைஃபை,என்எப்சி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு அதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.


Click it and Unblock the Notifications