முதல் முறையாக களமிறங்கும் ரியல்மி 3.! இவ்வளவு கம்மி விலையில்லா?
ஒப்போ நிறுவனத்தின் துணை நிறுவனமான ரியல்மி ஸ்மார்ட்போன் நிறுவனம் தனது, புதிய மாடலான ரியல்மி 3 ஸ்மார்ட்போனை இந்தியச் சந்தையில் முதல் முறையாக இன்று விற்பனை செய்கிறது.
ஒப்போ நிறுவனத்தின் துணை நிறுவனமான ரியல்மி ஸ்மார்ட்போன் நிறுவனம் தனது, புதிய மாடலான ரியல்மி 3 ஸ்மார்ட்போனை இந்தியச் சந்தையில் முதல் முறையாக இன்று விற்பனை செய்கிறது.

பிளிப்கார்ட் தளத்தில் இன்று மதியம் 12 மணிக்கு ரியல்மி 3 ஸ்மார்ட்போன் விற்பனையைத் துவங்குகிறது.

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்
ஒப்போ நிறுவனம் தனக்கென்ற தனி இடத்தை பிடித்துள்ளது போல், பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி நிறுவனமும் இடம் பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்பதை நிரூபிக்கும் விதத்தில் ரியல்மி 3 ஸ்மார்ட்போன், டூயல் ரியர் கேமரா சேவை உடன் கூடிய ஆண்ட்ராய்டு பை 9.0 இயங்குதளத்துடன் கலர்OS 6.0 மற்றும் 4230 எம்.ஏ.எச் பேட்டரி கொண்ட மீடியா டெக் ஹெலியோ P70 சிப்செட் உடன் விற்பனைக்கு வந்துள்ளது.

ரியல்மி 3 ஸ்மார்ட்போன்
ரியல்மி 3 ஸ்மார்ட்போன் இன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் வெறும் ரூ.8,999 என்ற விலையிலும், 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு வேரியண்ட் வெறும் ரூ.10,999 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

மார்ச் 26 தேதி - ரேடியன்ட் ப்ளூ
முதற்கட்ட விற்பனையில் ரியல்மி 3 ஸ்மார்ட்போன் இன் பிளாக் மற்றும் டைனமிக் பிளாக் கலர் ஸ்மார்ட்போன்களை ரியல்மி நிறுவனம் விற்பனை செய்யவுள்ளது. ரியல்மி 3 ஸ்மார்ட்போன் இன் ரேடியன்ட் ப்ளூ கலர் ஸ்மார்ட்போன் மார்ச் 26 தேதி முதல் விற்பனையாகு கிடைக்குமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி 3 சிறப்பம்சங்கள்:
- 6.2' இன்ச் எச்.டி பிளஸ் டிஸ்பிளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ்
- ஆக்டா கோர் மீடியா டெக் ஹெலியோ பி70 சிப்செட்
- 3 ஜி ரேம் மற்றும் 4 ஜிபி ரேம் வேரியன்ட்
- 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மற்றும் 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு வேரியண்ட்
- 256 ஜிபி வரையிலான மெமரி கார்டு சேவை
- 13 மெகா பிக்சல் கேமரா மற்றும் 2 மெகா பிக்சல் கொண்ட டூயல் ரியர் கேமரா
- 13 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க கேமரா
- வைஃபை
- ப்ளூடூத்
- 4230 எம்.ஏ.எச் பேட்டரி


Click it and Unblock the Notifications