பட்ஜெட் விலையில் தெறிக்கவிடும் புதிய ரியல்மி 3 ஸ்மார்ட்போன்.!
ரியல்மி 3 ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம், 32ஜிபி மெமரி பேஸ் மாடலாக ரூ.8999, இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 4ஜிபி 64ஜிபி மெமரி மாடல் ரூ, 10,999 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரியல்மி நிறுவனம் இந்தியாவில் ஏராளமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றது.
பல்வேறு தரப்பினருக்கும் இது ஏற்ற ஸ்மார்ட்போனாக இருக்கின்றது.

இளைஞர்களையும் பெரிதும் கவர்ந்து வருகின்றது. இந்நிலையில், புதிய ரிமியல்மி 3 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

ரியல்மி பிராண்டு 3 அறிமுகம்:
ரியல்மி 3 பிராண்டு இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த ஸ்மார்ட்போனில் ஏராளமான தொழில்நுடங்களும் இருக்கின்றன. மற்ற நிறுவனங்களுக்கும் இது போட்டியாக களத்தில் குதித்துள்ளது.

பட்ஜெட் விலை:
ரியல்மி 3 ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம், 32ஜிபி மெமரி பேஸ் மாடலாக ரூ.8999, இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
4ஜிபி 64ஜிபி மெமரி மாடல் ரூ, 10,999 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்:
- 6.2 இன்ச் 1520x720 பிக்சல் 19:9 HD+ IPS டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர்
- 900 மெகாஹெர்ட்ஸ் ARM Mali-G72 MP3 GPU
- 3 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம்

4230 எம்.ஏ.ஹெச் பேட்டரி:
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஓ.எஸ். 6.0
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, PDAF
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
- 13 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- ஸ்பிளாஷ் மற்றும் டஸ்ட் ப்ரூஃப்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
- 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி

ரியல்மி 3:
புதிய ரியல்மி 3 ஸ்மார்ட்போனின் 3 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மாடல் விலை ரூ.9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்கியிருக்கிறது.


Click it and Unblock the Notifications