Home
Mobile

போகோ எப்1 மாடலை விலையில் போட்டுத்தள்ளும் ரியல்மி 2-அறிமுகம்.!

மேலும் ரியல்மி 2ஸ்மார்ட்போனின் கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, எனவே இந்த ஸ்மார்ட்போன் மாடல் விற்பனையில் அதிக வெற்றிபெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By Prakash S

இந்திய மொபைல் சந்தையில் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் சியோமி நிறுவனம் பல்வேறு செயல்திறமைகளுடன் போகோ எப்1 என்ற ஸ்மார்ட்போன்
மாடலை அறிமுகம் செய்தது, இப்போது அந்த போபோ ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக ஒப்போ ரியில்மி நிறுவனம் ரியல்மி 2 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

போகோ எப்1 மாடலை விலையில் போட்டுத்தள்ளும் ரியல்மி 2-அறிமுகம்.!

போகோ எப்1 ஸ்மார்ட்போன் பொதுவாக பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது, ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் விலை சற்று உயர்வாக தான் உள்ளது. இப்போது அறிமுகம் செய்யப்பட்ட ரியல் மி 2ஸ்மார்ட்போனில் பல்வேறு அம்சங்களும் உள்ளது,
அதே சமயம் குறைவான விலையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரியல்மி 2ஸ்மார்ட்போனின் கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, எனவே இந்த ஸ்மார்ட்போன் மாடல் விற்பனையில் அதிக வெற்றிபெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சியோமி போகோ எப்1 ஸ்மார்ட்போன் மற்றும் ரியல்மி 2 ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களைப் பற்றி பார்ப்போம்.

போகோ எப்1 அம்சங்கள்:

போகோ எப்1 அம்சங்கள்:

டிஸ்பிளே: 6.18-இன்ச் (2246 x 1080 பிக்சல்)
செயலி: குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
ரியர் கேமரா: 12எம்பி+ 5எம்பி (டூயல் ரியர் கேமரா)
செல்பீ கேமரா: 20எம்பி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 8.1 ஒரியோ
LiquidCool டெக்னாலஜி
பேட்டரி: 4000எம்ஏஎச்
பின்பக்க ஃபிங்கர்பிரின் சென்சார்

ரியல்மி 2 அம்சங்கள்:

ரியல்மி 2 அம்சங்கள்:

டிஸ்பிளே: 6.2-இன்ச் (1520 x 720 பிக்சல்)
செயலி: குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்
ரியர் கேமரா: 13எம்பி + 2எம்பி (டூயல் ரியர் கேமரா)
செல்பீ கேமரா: 8எம்பி
பேட்டரி: 4230எம்ஏஎச்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
பின்பக்க ஃபிங்கர்பிரின்ட் சென்சார்

போகோ எப்1 விலை:

போகோ எப்1 விலை:

6 ஜிபி ரேம் + 64 ஜிபி உள்ளடக்க மெமரி. விலை 20,999 ரூபாய்
6 ஜிபி ரேம் + 128 ஜிபி உள்ளடக்க மெமரி. விலை 23,999 ரூபாய்
8 ஜிபி ரேம் + 256 ஜிபி உள்ளடக்க மெமரி. விலை 28,999 ரூபாய்
8 ஜிபி ரேம் + 256 ஜிபி உள்ளடக்க மெமரி. (Armoured டிசைன் ). விலை ரூ.29,999 ரூபாய்

ரியல்மி 2 விலை:

ரியல்மி 2 விலை:

3 ஜிபி ரேம் + 32 ஜிபி உள்ளடக்க மெமரி. விலை 8,990 ரூபாய்
4 ஜிபி ரேம் + 64 ஜிபி உள்ளடக்க மெமரி. விலை 10,990 ரூபாய்

 ரியல்மி 2 ஸ்மார்ட்போனின் மிக முக்கியமான அம்சங்கள்:

ரியல்மி 2 ஸ்மார்ட்போனின் மிக முக்கியமான அம்சங்கள்:

ரியல்மி 2 செல்பீ கேமராவில் HDR மற்றும் bokeh mode உள்ளது, பின்பு ஏஆர் ஸ்டிக்கர், ரியல்-டைம், AI Beautification 2.0 போன்ற அம்சங்களும் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக எபபோதும் போல வைபை போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Realme 2 with 6.2-inch HD+ display, dual rear cameras launched in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X