ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

|

ரியல்மி நிறுவனம் தற்சமயம் தனது ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிர விலைகுறைப்பை அறிவித்துள்ளது, அதன்படி விலைகுறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் மாடலை பிளிப்கார்ட் வலைதளத்தில் வாங்க முடியும்.

ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

4ஜிபி ரேம் கொண்ட ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை 12,490-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.11,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

6ஜிபி ரேம் கொண்ட ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை 14,490-ஆக இருந்தது,தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.13,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

8ஜிபி ரேம் கொண்ட ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை 16,490-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.15,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

டிஸ்பிளே:

ரியல்மி 2 ப்ரோ 6.3 இன்ச் முழு எச்.டி உடன் கூடிய 19:9 விகித டியூ டிராப் நாட்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் அடக்கம். குறிப்பாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 4 பாதுகாப்பு அம்சத்துடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

சிப்செட்

இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப் டிராகன் 660 சிப்செட் மற்றும் கலர் ஓ.எஸ் 5.1 உடன் கூடிய ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது எனவே இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

சேமிப்பு:

- 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்
- 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்
- 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் வசதிகளை கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

கேமரா:

16 மெகா பிக்சல் கேமரா வுடன் கூடி 2 மெகா பிக்சல் ஏ.ஐ டூயல் பின்னங் கேமரா சேவை மற்றும் 16 மெகா பிக்சல் முன் ஏ.ஐ செல்பி கேமரா ஆதரவுன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

பேட்டரி-இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் . மேலும் 3500எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Realme 2 Pro receives a price cut again: Read more about this in Tamil GizBot

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more