யாரு சாமி அவன்.. 200MP கேமரா.. 1.5K OLED டிஸ்பிளே.. புது Realme 17 Pro+ ஸ்மார்ட்போன்.. எப்போது அறிமுகம்?
ரியல்மி நிறுவனத்தின் அடுத்த 200 எம்பி கேமரா மாடலாக ரியல்மி 17 ப்ரோ+ (Realme 17 Pro+) இருக்கப் போகிறது. டிஸ்பிளே மற்றும் கேமரா பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. இந்த ரியல்மி 17 ப்ரோ+ ஸ்மார்ட்போன் எப்போது வெளியாகும்? விலை எப்படி இருக்கும்? உள்ளிட்ட முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
கடந்த ஜனவரி மாதத்தில் ரியல்மி 16 ப்ரோ சீரிஸ் (Realme 16 Pro Series) மாடல்கள் இந்திய மார்கெட்டில் வெளியாகின. ஆகவே, அடுத்த ஜனவரி மாதத்தில் ரியல்மி 17 ப்ரோ சீரிஸ் (Realme 17 Pro Series) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாகவே இந்த ரியல்மி 17 ப்ரோ சீரிஸ் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

சீன மார்கெட்டில் வெளியாகுமா என்பது தெரியவில்லை. குளோபல் மற்றும் இந்திய மார்கெட்டில் கட்டாயம் வெளியாகும். ஏனென்றால், முந்தைய ரியல்மி 16 ப்ரோ சீரிஸ் மாடல்கள் அப்படித்தான் வெளியாகின. இதையே டிஜிட்டல் சாட் ஸ்டேஷனும் (Digital Chat Station) உறுதி செய்து இருக்கிறது. இந்த தளத்திலேயே கேமரா, டிஸ்பிளே பீச்சர்கள் கசிந்துள்ளன.
ரியல்மி 17 ப்ரோ+ அம்சங்கள் (Realme 17 Pro+ Specifications): 6.78 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. 1.5K ரெசொலூஷன் கொடுக்கப்பட இருக்கிறது. 200 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்க இருக்கிறது. இந்த விவரங்களை மட்டுமே டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக கசிந்த பீச்சர்களில் 200 எம்பி மெயின் கேமராவில் சாம்சங் எச்பி5 (Samsung HP5) சென்சார் கிடைக்க இருக்கிறது. 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமராவில் சாம்சங் ஜேன்5 (Samsung JN5) சென்சார் மற்றும் 3.5x ஆப்டிகல் ஜூமிங் கொடுக்கப்பட இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே தெரியவந்துள்ளன. விலை மற்றும் மற்ற பீச்சர்களுக்கு முந்தைய மாடலை பார்க்க வேண்டும்.
ரியல்மி 16 ப்ரோ+ ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் (1280 x 2800 பிக்சல்கள்) ஓஎல்இடி டிஸ்பிளே கிடைத்தது. 1.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் ம்றும் 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ரியல்மி யுஐ 7.0 (realme UI 7.0) கொடுத்துள்ளது.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 4 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 722 ஜிபியு (Adreno 722 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது. 200 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் கேமரா கிடைக்கிறது. இதிலும் சாம்சங் சென்சார்கள் கிடைக்கின்றன. ஆகவே, கேமராவில் பெரிய வித்தியாசம் இல்லை.
50 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங், IP69 ரேட்டிங் மற்றும் IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கிறது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரி கிடைக்கிறது. ரியல்மி 17 ப்ரோ+ ஸ்மார்ட்போனில் இதைவிட பெரிய பேட்டரி எதிர்பார்க்கலாம். ரூ.45,000 பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications