ஆக.12-க்கு அப்புறம் இதுதான்.. பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. 144Hz டிஸ்பிளே.. 14GB ரேம்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
ரியல்மி பிரியர்கள் வேறு எந்த ஸ்மார்ட்போனையும் வாங்காமல் வைத்திருக்கும்படியான பீச்சர்களுடன் ரியல்மி 16எக்ஸ் 5ஜி (Relame 16x 5G) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி உறுதியாகிவிட்டதால், பீச்சர்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இந்த ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் மற்றும் எந்த பட்ஜெட்டில் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி (Realme Narzo 100X 5G) ஸ்மார்ட்போனின் டிசைனை போலவே இந்த ரியல்மி 16எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. கலரில் மட்டும் மாற்றம் இருக்கிறது. மற்றபடி கேமரா, எல்இடி ஃபிளாஷ் மற்றும் ஆரா எல்இடி ஆகியவை ஒரே மாதிரியாக இருக்கின்றன. ஆனால், பீச்சர்களில் மாற்றங்களை பார்க்க முடிகிறது.

ரியல்மி 16எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Relame 16x 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core MediaTek Dimensity 6300) சிப்செட்டை இந்த ரியல்மி 16எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 14 ஜிபி டைனாமிக் ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொடுத்துள்ளது. ஆகவே, பர்ஃபாமென்ஸ் பட்டையை கிளப்பும்படி இருக்கும்.
144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட டிஸ்பிளேவை கொடுக்க இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட இருக்கிறது. ரியல்மி யுஐ கிடைக்க இருக்கிறது. ஐபி65 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Water Resistance) கொடுக்கும் மாடலாக இந்த ரியல்மி 16எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது.
சிங்கிள் சார்ஜில் 2 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும்படி 7000mAh பேட்டரியை இந்த ரியல்மி 16எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 3 மணி நேரங்களுக்கு இன்ஸ்டாகிராம் ஸ்க்ரோலிங் கொடுக்கும். இதுபோக ரிவர்ஸ் சார்ஜிங் (Reverse Charging) கொடுக்கப்பட்டு உள்ளது.
இதுபோக பைபாஸ் சார்ஜிங் (Bybass Charging) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 5300 எம்எம்² ஏர்ப்ளோவ் விசி கூலிங் சிஸ்டம் (AirFlow VC Cooling System) கிடைக்கிறது. மேலும், ஹைப்பர் கூலிங் (Hyper Cooling) கிடைக்கிறது. கேமிங் பிரியர்களுக்காக ஜிடி பூஸ்ட் (GT Boost) கிடைக்கிறது. 6 வருடங்களுக்கு பேட்டரி ஹெல்த் கிடைக்கிறது.
50 எம்பி மெயின் கேமராவை கொண்டுள்ளது. ஏஐ எரைசர் (AI Eraser), ஏஐ அல்ட்ரா கிளாரிட்டி (AI Ultra Clarity) போன்ற ஏஐ கேமரா பீச்சர்களை இந்த ரியல்மி 16எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது.
ப்ளூமிங் பிரவுன் (Blooming Brown) மற்றும் ப்ளூமிங் சில்வர் (Blooming Silver) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.
5 வருடங்களுக்கு ஸ்மூத் சர்டிபிகேஷன் கொடுக்கிறது. மேலும், 2 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. எஸ்ஜிஎஸ் டிராப் ப்ரூப் (SGS Drp Proof) கிடைக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளன. ரூ.20,000 முதல் ரூ.25,000 பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய மார்கெட்டில் ரியர்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.20,000 பட்ஜெட்டில் இருக்கிறது. ஆகவே, இதையும் கிட்டத்தட்ட அதே பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம். அதே நேரத்தில் இதில் 7000mAh பேட்டரி கிடைப்பதால், விலை சற்று குறைவாகவும் இருக்கலாம். ஏனென்றால், நார்சோ 100எக்ஸ் மாடலில் 8000mAh பேட்டரி கிடைத்தது.


Click it and Unblock the Notifications