வெச்சி செஞ்சிட்டாங்க.. பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. 144Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் ஏஐ பல்ஸ் லைட் கொண்ட மாடலாக ரியல்மி 16எக்ஸ் 5ஜி (Realme 16x 5G) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதுபோக 7000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா போன்ற பீச்சர்களை கொடுத்து இருக்கிறது. இந்த ரியல்மி 16எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ரியல்மி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட்டில் பிரீமியம் லுக் கொடுப்பதால், நல்ல வரவேற்பை பெறுகின்றன. இதில் ரியல்மி 16எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஏஐ பல்ஸ் லைட் மற்றும் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொண்ட மாடலாக வெளியாகி இருக்கிறது. குளோரி ஒயிட் மற்றும் எண்டுரன்ஸ் பிரவுன் ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது.

ரியல்மி 16எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme 16x 5G Specifications): 6.8 இன்ச் (1570 x 720 பிக்சல்கள்) ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளேவை இந்த ரியல்மி 16எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. 1200 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கிடைக்கிறது.
ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ரியல்மி யுஐ 7.0 (realme UI 7.0) கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் ஏஐ நோட்ஸ் அசிஸ்டன்ட் (AI Notes Assistant) கிடைக்கிறது.
ஏஐ எரைசர் (AI Eraser) உள்ளது. ஏஐ பல்ஸ் லைட் (AI Pulse Light) கிடைப்பதால், அதற்காக கஸ்டமைசபிள் கன்ட்ரோல்கள் கிடைக்கின்றன. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கிடைக்கிறது. மேலும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ரியல்மி 16எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா + செகண்டரி கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா கிடைக்கிறது. ஏஐ பல்ஸ் லைட் மட்டுமல்லாமல், எல்இடி ஃபிளாஷ் மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. பஞ்ச்-ஹோல் டிசைனில் 8 எம்பி செல்பீ கேமராவை பேக் செய்துள்ளது. இதிலும் 1080p ரெக்கார்டிங் உள்ளது.
45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த பேட்டரியுடன் 8.88 எம்எம் தடிமன் மற்றும் 217 கிராம் எடை கொடுத்துள்ளது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் அல்ட்ரா-லீனியர் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Ultra Linear Bottom Ported Speaker) வருகின்றன.
டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்க IP65 ரேட்டிங் கிடைக்கிறது. மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி (Military Grade Durability) கொடுக்க எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD 810H) சர்டிபிகேஷன் கொடுத்துள்ளது. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.25,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.27,999ஆகவும் இருக்கிறது.
மேலும், 6 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.30,999ஆகவும் இருக்கிறது. அறிமுக சலுகையில் ரூ.2,000 கம்மியான விலைக்கு கிடைக்க இருக்கிறது. ஆகவே, ரூ.23,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications