அடுத்த Realme ஆட்டக்காரர்.. 7000mAh பேட்டரிக்கும் மேல.. ஆனால், பட்ஜெட்ல களமிறங்க போகுது.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனத்தின் அடுத்த பட்ஜெட் மாடலாக ரியல்மி 16எக்ஸ் 5ஜி (Realme 16x 5G) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் ரேம், ஸ்டோரேஜ் மற்றும் கலர் விவரங்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. 7000mAh பேட்டரிக்கும் மேல் கேபாசிட்டி எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரியல்மி 16எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் ரியல்மி 14எக்ஸ் 5ஜி (Realme 14x 5G) ஸ்மார்ட்போனில் 6000mAh பேட்டரி கிடைத்தது. அடுத்து வெளியான ரியல்மி 15எக்ஸ் 5ஜி (Realme 15x 5G) ஸ்மார்ட்போனில் 7000mAh பேட்டரி கிடைத்தது. ஆகவே, ரியல்மி 16எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 7000mAh க்கும் மேல் பேட்டரி கேபாசிட்டி எதிர்பார்க்கலாம். இந்த நேரத்தில் முக்கிய விவரங்கள் கசிந்துள்ளன.

டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் (Abhishek Yadav) அவரது எக்ஸ் தளத்தில் ரியல்மி 16எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கலர் விவரங்களும் வெளியாகி இருக்கிறது. முந்தைய வெர்ஷன்களை போலவே 4 ஜிபி ரேம், 6 ஜிபி ரேம் கொண்ட மாடலாக இது இருப்பது தெரிகிறது. ஆகவே, பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்.
ரியல்மி 16எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme 16x 5G Specifications): 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்க இருக்கிறது. மேலும், 6 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் கிடைக்க இருக்கிறது. எண்டுரன்ஸ் பிரவுண் (Endurance Brown) மற்றும் குளோரி ஒயிட் (Glory White) கலர்களில் வெளியாக இருக்கிறது.
இந்த விவரங்கள் மட்டுமே கசிந்துள்ளது. அதேபோல வெளியீட்டு விவரங்கள் தெரியவில்லை. ஓரிரு மாதங்களில் வெளியாக வாய்ப்புள்ளது. முன்னதாக வெளியான ரியல்மி 15எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.16,999 பட்ஜெட்டில் இருந்தது. ஆகவே, ரியல்மி 16எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.17,999 பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம். 4 ஜிபி ரேம் மாடல் இன்னும் மலிவாக இருக்க வாய்ப்புள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் பீச்சர்களை தெரிந்து கொள்ள, ரியல்மி 15எக்ஸ் 5ஜி மாடலில் கிடைத்த பீச்சர்களை பார்க்க வேண்டும். ஏனென்றால், இதில் இருந்து அப்கிரேட் செய்யப்பட்ட பீச்சர்களே ரியல்மி 16எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் கிடைக்கும். ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட்டை ரியல்மி 15எக்ஸ் 5ஜி கொடுத்துள்ளது.
6.8 இன்ச் (1570 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா (சோனி ஐஎம்எக்ஸ்851 சென்சார்) மற்றும் 50 எம்பி செல்பீ ஷூட்டர் (ஓவி50டி40 சென்சார்) கிடைக்கிறது.
60W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7000mAh பேட்டரி கிடைக்கிறது. ஆகவே, அதிக பேட்டரி கேபாசிட்டியை ரியல்மி 16எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் கிடைக்கும். IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் மற்றும் MIL-STD-810H சர்டிபிகேஷன் கொண்ட மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கிடைக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால், இந்த பீச்சர்கள் ரியல்மி 15எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications