இதுக்குத்தானே தவம் கிடந்தோம்.. ரூ.15,000 பட்ஜெட்ல புது Realme ஸ்மார்ட்போன்.. 7000mAh பேட்டரி.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனத்தின் பட்ஜெட் விலை மாடலாக வெளியாக இருக்கும் ரியல்மி 16எக்ஸ் 5ஜி (Realme 16x 5G) ஸ்மார்ட்போனானது, இந்திய ஸ்மார்ட்போன் பிரியர்களை வெயிட்டிங் மோடில் போட்டு வைத்துள்ளது. பிஐஎஸ் சர்டிபிகேஷனுக்கு வந்துள்ளதால், ஓரிரு வாரங்களுக்குள் அறிவிப்பு மற்றும் வெளியீடு இருக்க வாய்ப்புள்ளது.
கடந்த மாதம் ரியல்மி 16 ஸ்மார்ட்போன் இந்திய மார்கெட்டில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால், பட்ஜெட் விலை பிரியர்களுக்கு ஏற்ற விலையில் எதிர்பார்க்க முடியவில்லை. ஏனென்றால், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.31,999ஆக இருந்தது. ஆனால், ரியல்மி 16எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் பட்ஜெட்டில் கிடைக்க இருக்கிறது.

ஏப்ரல் மாதத்தில் இறுதியில் ரியல்மி 16எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் ரேம், ஸ்டோரோஜ் மற்றும் கலர் உள்ளிட்ட விவரங்கள் மார்கெட்டில் கசிந்தன. ஆகவே, ஓரிரு வாரங்களில் இந்தியாவில் எதிர்பார்க்கலாம் என்று ரியல்மி பிரியர்கள் காத்திருந்தனர். இதை உறுதி செய்யும் விதமாக ரியல்மி 16எக்ஸ் 5ஜி மாடலானது பிஐஎஸ் சர்டிபிகேஷனை (BIS Certification) முடிந்துள்ளது.
இதனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு வாரங்களில் கட்டாயம் இருக்கும். முன்னதாக வெளியான பீச்சர்களில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் வெளியாக இருப்பது தெரியவந்தது. 6 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் வேரியண்ட்டும் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
மேலும், எண்டுரன்ஸ் பிரவுண் (Endurance Brown) மற்றும் குளோரி ஒயிட் (Glory White) கலர்களில் இந்த ரியல்மி 16எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.15,000 முதல் ரூ.17,000 வரையில் இருக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால், முன்னதாக வெளியான ரியல்மி 15எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இதே பட்ஜெட்டில் கிடைத்தது.
அதோபோல ரியல்மி 15எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 60W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரி கிடைக்கிறது. ஆகவே, ரியல்மி 16எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 7000mAh+ பேட்டரி கிடைக்க இருக்கிறது. பெரிய பேட்டரி கேபாசிட்டியுடன் கிடைக்கும் பட்ஜெட் மாடலாகவும் வெளியாகும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
சொல்லப்போனால், ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போனானது, மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் வெளியாகி இருந்தாலும், 7000mAh பேட்டரி மற்றும் 60W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுத்தது. ரியல்மி 15எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனிலும் இதே ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பேட்டரி கிடைத்தது. ஆகவே, ரியல்மி 16எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் கட்டாயம் அதிக பேட்டரி கேபாசிட்டி எதிர்பார்க்கலாம்.
மலிவு விலைக்கு வெளியாகினால், ஃபாஸ்ட் சார்ஜிங் குறைக்கப்பட வாய்ப்புள்ளது. ஆகவே, 45W எதிர்பார்க்கலாம். ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போனை பொறுத்தவரையில், ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 டர்போ 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6400 Turbo 6nm) சிப்செட் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 சிப்செட் கிடைக்கிறது.
6.57 இன்ச் (2372 x 1080 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே, 4200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால், ரியல்மி 16எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் எல்சிடி டிஸ்பிளேவே கிடைக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால், பட்ஜெட் மாடலாக கிடைக்க இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா, 2 எம்பி மோனோகுரோம் கேமரா உள்ளது. இதே கேமரா செட்டப் 16எக்ஸ் மாடலில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications