அடிச்சு தூக்குது ஆர்டர்.. ரூ.3,675 ஆஃபரில் 7000mAh பேட்டரி 5G போன்.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
பெரிய பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை பட்ஜெட்டில் வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு பக்காவான நேரம் வந்துவிட்டது. பிளிப்கார்ட் தளத்தில் ரூ.2,000 அறிமுக சலுகை மற்றும் ரூ.1,675 கிரெடிட் கார்டு சலுகை போக ரியல்மி 16எக்ஸ் 5ஜி (Realme 16x 5G) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.
இந்தியாவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி 16எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று தொடங்கி இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. ரூ.25,999 விலை கொண்ட 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலானது ரூ.2,000 அறிமுக சலுகை போக ரூ.23,999 விலைக்கு கிடைக்கிறது.

அதேபோல ரூ.27,999 விலை கொண் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலானது ரூ.25,999 விலைக்கும், ரூ.30,999 விலை கொண்ட 6 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலானது ரூ.28,999 விலைக்கும் கிடைக்கிறது. இதுபோக தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1,675 சலுகையும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஆகவே, ரூ.22,324 விலைக்கு இந்த ரியல்மி 16எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். எண்டுரன்ஸ் பிரவுண் (Endurance Brown) மற்றும் குளோரி ஒயிட் (Glory White) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. ரியர் கேமராவில் ஏஐ பல்ஸ் லைட் (AI Pulse Light) கொடுக்கும் மாடலாக இந்த ரியல்மி 16எக்ஸ் 5ஜி இருக்கிறது.
ரியல்மி 16எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme 16x 5G Specifications): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட்டை இந்த ரியல்மி 16எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.
ரியல்மி யுஐ 7.0 (realme UI 7.0) கொடுக்கப்பட்டு உள்ளது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.8 இன்ச் (1570 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த ஐபிஎஸ் (IPS) டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த ரியல்மி 16எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா + செகண்டரி கேமரா கொண்ட டூயல் ரியர் சிஸ்டம் (Dual Rear Camera System கொடுக்கப்பட்டுள்ளது. மெயின் கேமராவில் 1080p ரெசொலூஷனில் வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 8 எம்பி கேமராவை இந்த ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.
8.88 எம்எம் தடிமன் மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரியை பேக் செய்துள்ளது. மொத்தமாக 217 கிராம் எடை வருகிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom Ported Speaker) மற்றும் எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD 810H) சர்டிபிகேஷன் உள்ளது. IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications