Home
Mobile

ரியல்மி களமிறக்கும் புதிய 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. 7000எம்ஏஎச் பேட்டரி.. 256ஜிபி மெமரி.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனம் விரைவில் ரியல்மி 16எக்ஸ் 5ஜி (Realme 16x 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் வாரங்களில் இந்த புதிய ரியல்மி போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. அதுவும் இந்த போன் கம்மி பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இப்போது ஆன்லைனில் கசிந்த ரியல்மி 16எக்ஸ் 5ஜி போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ரியல்மி 16எக்ஸ் 5ஜி அம்சங்கள் ( Realme 16x 5G Specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (MediaTek Dimensity 6300 chipset) சிப்செட் உடன் ரியல்மி 16எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.

ரியல்மி களமிறக்கும் புதிய 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் ரியல்மி 16எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ரியல்மி 16எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ரியல்மி 16எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ரியல்மி 16எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate) ஆதரவு கொண்ட டிஸ்பிளே உடன் ரியல்மி 16எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் என்டியூரன்ஸ் பிரவுன் (Endurance Brown) மற்றும் குளோரி ஒயிட் (Glory White) நிறங்களில் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

7000எம்ஏஎச் பேட்டரி உடன் ரியல்மி 16எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த புதிய ரியல்மி 16எக்ஸ் 5ஜி போன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் இருக்கும்.

அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ரியல்மி 16எக்ஸ் 5ஜி போன் ரூ.15,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

photo credits: passionategkeez, realme

Best Mobiles in India

English summary
Realme 16x 5G images and specifications leaked online: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X