ரூ.2,200 ஆஃபர் ரேட்ல 8000mAh பேட்டரி Realme ஸ்மார்ட்போன்.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் 8000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி சோனி சென்சார் கேமரா, 144Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே போன்ற பட்டையை கிளப்பும் பீச்சர்களை கொண்ட ரியல்மி 16டி (Realme 16T) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் கொண்ட இந்த மாடலின் விவரங்களை பார்க்கலாம்.
8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.32,999ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து பஞ்சாப் நேஷனல் பேங்க் கார்டுகளுக்கு ரூ.2,200 தள்ளுபடி கிடைக்கிறது. மேலும், பிளிப்கார்ட் ஆக்சிஸ் கார்டுக்கு ரூ.1,650 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.30,799 விலைக்கு இந்த ரியல்மி 16டி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

ரியல்மி 16டி அம்சங்கள் (Realme 16T Specifications): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் கிடைக்கிறது. ரியல்மி யுஐ 7.0 (Realme UI 7.0) மற்றும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது.
144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.8 இன்ச் (1570 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே உள்ளது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 254 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட்டை இந்த டிஸ்பிளே கொண்டுள்ளது. 975 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. சோனி ஐஎம்எக்ஸ்852 (Sony IMX852) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா உள்ளது.
மேலும், 2 எம்பி மோனோகுரோம் கேமராவுடன் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொடுத்துள்ளது. லுமாகலர் இமேஜ் என்ஜின் (LumaColor IMAGE Engine) உள்ளது. 1080p 60FPS வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக சோனி ஐஎம்எக்ஸ்480 (Sony IMX480) சென்சார் கொண்ட 16 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.
இந்த கேமராவுக்கு ஏஐ போர்ட்ராய்டு குளோவ் (AI Portrait Glow) சப்போர்ட் உள்ளது. ரிம் லைட் (Rim Light), நேச்சுரல் லைட் (Natural Light) மற்றும் ஸ்டூடியோ லைட் (Studio Light) அணுகல்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், ஏஐ பாப்அவுட் கோலாஜ் (AI Popout Collage) கிடைக்கிறது. ஏஐ ஸ்டைல்மீ (AI StyleMe) கிடைத்து இருக்கிறது.
45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 8000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு பைபாஸ் சார்ஜிங் (Bybass Charging) மற்றும் வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் (Wired Reverse Charging) கிடைக்கிறது. 7 வருடங்களுக்கு பேட்டரி ஹெல்த் கொடுக்கப்படுகிறது. 8.88 எம்எம் தடிமன் மற்றும் 224 கிராம் எடை கொடுத்துள்ளது. ஆகவே, ஸ்லிம் மாடலாக எதிர்பார்க்க முடியாது.
பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு நிகராக IP68 ரேட்டிங் மற்றும் IP69 ப்ரோ ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. இதுபோக எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD 810H) சர்டிபிகேஷன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது மிலிட்டரி கிரேடு புரொடெக்சன் கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும் சர்டிபிகேஷனாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications