Home
Mobile

ரியல்மி களமிறக்கும் புதிய போன்.. 256ஜிபி மெமரி.. Dimensity சிப்செட்.. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி 16டி (Realme 16T) ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும். இந்நிலையில் இந்த ரியல்மி 16டி போனின் சில முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது.

ரியல்மி 16டி அம்சங்கள் (Realme 16T Specifications): தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (MediaTek Dimensity 6300 chipset) உடன் இந்த புதிய ரியல்மி 16டி ஸ்மார்ட்போன் வெளியாகும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளது.

ரியல்மி களமிறக்கும் புதிய போன்.. 256ஜிபி மெமரி.. எந்த மாடல்?

குறிப்பாக 8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் ரியல்மி 16டி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

அரோரா கிரீன், ஸ்டார்லைட் பிளாக் மற்றும் ஸ்டார்லைட் ரெட் நிறங்களில் வெளிவரும் ரியல்மி 16டி ஸ்மார்ட்போன். தற்போது ரியல்மி 16டி போனின் சில விவரக்குறிப்புகள் மட்டுமே வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும். மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி (Realme Narzo 100 Lite 5G) போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி அம்சங்கள் (Realme Narzo 100 Lite 5G specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (Dimensity 6300 chipset) உடன் ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் உள்ளது.

6.8-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி ஐபிஎஸ் டிஸ்பிளே உடன் இந்த ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 180Hz டச் சாம்பிளிங் ரேட், 900 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் 13எம்பி ரியர் கேமரா உடன் வெளிவந்துள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் 1080P வீடியோக்களை பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

6ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரை மெமரி வசதியுடன் ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்(Side-mounted fingerprint sensor) வசதியுடன் ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி வெளிவந்துள்ளது. மேலும் இந்த போனில் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust and splash resistant) ஆதரவும் உள்ளது. இதுதவிர MIL-STD-810H புரொடெக்சன் ஆதரவும் இதில் உள்ளது.

ரியல்மி களமிறக்கும் புதிய போன்.. 256ஜிபி மெமரி.. எந்த மாடல்?

7000mAh பேட்டரி உடன் ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

realme UI 7.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் 5ஜி, 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.3, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், குளோனாஸ், கலிலியோ (Galileo) யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி போனின் ஆரம்ப விலை ரூ.13,499-ஆக உள்ளது

Best Mobiles in India

English summary
Realme 16T Key Specifications Leaked Online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X