அவசரப்பட்டு வேற போன் வாங்காதீங்க.. வருது புது Realme ஸ்மார்ட்போன்.. 7000mAh மேல பேட்டரி.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனத்தில் அடுத்த பட்ஜெட் மாடலாக ரியல்மி 16டி 5ஜி (Realme 16T 5G) வெளியாக இருக்கிறது. இப்போது, பிஐஎஸ் சர்டிபிகேஷனுக்கு வந்துள்ளது. ரேம், ஸ்டோரேஜ் மற்றும் கலர் விவரங்களும் கசிந்துள்ளன. ரியல்மி 15டி 5ஜி ஸ்மார்ட்போனைவிட அதிக பேட்டரி கேபாசிட்டி எதிர்பார்க்கலாம். இந்த ரியல்மி 16டி 5ஜி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் அதிக பேட்டரி கேபாசிட்டி கொண்ட ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் கொடுக்கும் நிறுவனங்களில் ரியல்மி பட்டையை கிளப்பி வருகிறது. 7000mAh பேட்டரியுடன் வெளியான ரியல்மி 15டி 5ஜி ஸ்மார்ட்போனானது, நல்ல வரவேற்பு பெற்றது. இதனால், ரியல்மி 16டி 5ஜி ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. இப்போது, வெளியீடு உறுதியாகிவிட்டது.

இந்திய மார்கெட்டில் ஸ்மார்ட்போன்கள் வெளியாவதற்கு முன்பாக பிஐஎஸ் சர்டிபிகேஷனுக்கு வருவது வழக்கமாக உள்ளது. இப்போது, ரியல்மி 16டி 5ஜி ஸ்மார்ட்போனும் வந்துள்ளது. இதில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது.
மேலும், அரோரா கிரீன் (Aurora Green), ஸ்டார்லிட் பிளாக் (Starlight Black) மற்றும் ஸ்டார்லிட் ரெட் (Starlight Red) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. இந்த விவரங்கள் மட்டுமே தெரியவந்துள்ளன. மற்ற பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை தெரிந்து கொள்ள ரியல்மி 15டி 5ஜி ஸ்மார்ட்போனை பார்க்க வேண்டும். இதிலிருந்து அப்கிரேட் செய்யப்பட்ட மாடலாகவே ரியல்மி 16டி 5ஜி இருக்கும்.
ரூ.20,999 பட்ஜெட்டில் ரியல்மி 15டி 5ஜி ஸ்மார்ட்போன் களமிறக்கப்பட்டது. இந்த பட்ஜெட்டில் 7000mAh பேட்டரி மற்றும் 60W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுத்தது. ஆகவே, ரூ.25,000 பட்ஜெட்டுக்குள் ரியல்மி 16டி 5ஜி ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கலாம். அதேபோல 7000mAh பேட்டரிக்கும் அதிக கேபாசிட்டி மற்றும் கூடுதல் ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கும் மாடலாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
ரியல்மி 15டி 5ஜி அம்சங்கள் (Realme 15T 5G Specifications): ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 மேக்ஸ் (Octa Core 6nm MediaTek Dimensity 6400 Max) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ரியல்மி யுஐ 6.0 (Realme UI 6.0) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கொண்ட மாடலாக ரியல்மி 16டி 5ஜி இருக்க வாய்ப்புள்ளது.
6.57 இன்ச் (2372 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுத்து உள்ளது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், 50 எம்பி செல்பீ கேமராவை கொடுத்து உள்ளது. 4K வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
60W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரி உள்ளது. பெரிய பேட்டரி இருந்தும் 7.79 எம்எம் தடிமன் வருகிறது. 181 கிராம் எடை உள்ளது. IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங்குடன் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ உள்ளது.


Click it and Unblock the Notifications








