8000mAh பேட்டரி, IP69, செல்பீ மிரர் உடன் புது Realme 5ஜி போன் அறிமுகம்..ரூ.3000 ஆபரில் மே.27 முதல் விற்பனை!
ரியல்மி (Realme) நிறுவனம் ஆனது, 8000mAh பேட்டரி கொண்ட ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போன், ஒரு புதிய ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஒரு புதிய இயர்பட்ஸ் என ஒரே நேரத்தில் 3 புதிய தயாரிப்புகளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது.
புதிய ஸ்மார்ட்போன் - ரியல்மி 16டி 5ஜி (Realme 16T 5G) மாடல் ஆகும். புதிய ஸ்மார்ட் வாட்ச் - ரியல்மி வாட்ச் எஸ்5 (Realme Watch S5) மாடல் ஆகும். புதிய இயர்பட்ஸ் - ரியல்மி பட்ஸ் ஏர் 8 ப்ரோ (Realme Buds Air 8 Pro) மாடல் ஆகும்.

ரியல்மி பட்ஸ் ஏர்8 ப்ரோ, ரியல்மி வாட்ச் எஸ்5 விலை: பட்ஸ் ஏர்8 ப்ரோ ரூ.6999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் விற்பனை ஜூன் 3, மதியம் 12 மணி முதல் ஜூன் 5, இரவு 11:59 மணி நடக்கும். இது பிளிப்கார்ட், அமேசான் வழியாக வாங்க கிடைக்கும். ரியல்மி வாட்ச் எஸ்5 ரூ.7,499 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஜூன் 5 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும்.
ரியல்மி 16டி 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 144ஹெர்ட்ஸ் டிஸ்பிளே
- 50 மெகாபிக்சல் சோனி IMX852 ரியர் கேமரா
- 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
- 8000mAh பேட்டரி
- IP69 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு
- ராணுவத் தர அதிர்ச்சி பாதுகாப்பு
ரியல்மி 16டி 5ஜி விலை: இந்தியாவில் ரியல்மி 16டி 5ஜி ஸ்மார்ட்போனின் 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.29,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போனின் 8GB ரேம் + 128GB ஆப்ஷன் ரூ.31,999 க்கும், 8GB ரேம் + 256GB ஆப்ஷன் ரூ.34,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
ரியல்மி 16டி 5ஜி விற்பனை: இந்த ஸ்மார்ட்போன் ஸ்டார்லைட் பிளாக், ஸ்டார்லைட் ப்ளூ மற்றும் ஸ்டார்லைட் ரெட் ஆகிய 3 கலர்களில் வெளியாகியுள்ளது. இதை பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி இந்தியா இணையதளம் மூலம் வாங்கலாம். முன்பதிவுகள் மே 26 வரை திறந்திருக்கும். முதல் விற்பனை மே 27 அன்று இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்குத் தொடங்கி ஜூன் 2 வரை தொடரும்.
ரியல்மி 16டி 5ஜி சலுகைகள்: பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம்-இல் வழங்கப்படும் அறிமுக சலுகைகளின் ஒரு பகுதியாக, வாங்குபவர்கள் கிரெடிட் கார்டு இஎம்ஐ பரிவர்த்தனைகளில் ரூ.3,000 வரையிலான உடனடி தள்ளுபடியையோ அல்லது வங்கி மற்றும் யுபிஐ மூலம் ரூ.2,000 வரையிலான சலுகைகளையோ பெறலாம்.
மேலும், இந்நிறுவனம் ஏற்கனவே உள்ள ரியல்மி பயனர்களுக்கு 12 மாதங்கள் வரை வட்டியில்லா இஎம்ஐ மற்றும் கூடுதலாக ரூ.1,000 பலனையும் வழங்குகிறது. இதே போன்ற சலுகைகள், முன்பதிவு பரிசுடன் பிரதான சில்லறை விற்பனை கடைகளிலும் கிடைக்கின்றன. அதாவது இது ஆன்லைன் வழியாக மட்டுமின்றி ஆப்லைன் வழியாகவும் அணுக கிடைக்கும்.
ரியல்மி 16டி 5ஜி விரிவான அம்சங்கள்:
- 6.8-இச் எல்சிடி டிஸ்பிளே
- 44Hz ரெஃப்ரெஷ் ரேட், 90.4 சதவீத ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, 16.7 மில்லியன் கலர்களுக்கான ஆதரவு மற்றும் 1,200 நிட்ஸ் வரையிலான ஹை-ப்ரைட்னஸ் மோட்
- சன் டிஸ்ப்ளே, புல்-ப்ரைட்னஸ் டிசி டிம்மிங், ஆட்டோமெட்டிக் மற்றும் மேனுவல் ப்ரைட்னஸ் அட்ஜஸ்ட்மென்ட்
- ஐ ப்ரொடெக்ஷன் மோட், ஸ்லீப் மோட், டார்க் மோட், கலர் டெம்ப்ரேச்சர் அட்ஜஸ்ட்மென்ட் மற்றும் ஆப் பேஸ்டு ரெஃப்ரெஷ் ரேட் கண்ட்ரோல்கள்
- மீடியாடெக் டைமென்சிட்டி 6300 சிப்செட்
- 12GB வரையிலான LPDDR4X ரேம் மற்றும் 256GB வரையிலான UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ரியல்மி யுஐ 7
- ஸ்பிலிட்-ஸ்கிரீன் மல்டிடாஸ்கிங், ஃப்ளோட்டிங் விண்டோஸ், ஸ்கிரீன் ரெக்கார்டிங், ஒப்போ ஷேர் மற்றும் ஐஓஎஸ் ஃபைல் ஷேர் ஆதரவு
- எப்/1.8 அபெர்ச்சர் மற்றும் ஆட்டோஃபோகஸ் ஆதரவுடன் கூடிய 50-மெகாபிக்சல் சோனி IMX852 ப்ரைமரி கேமரா
- எப்/2.4 அபெர்ச்சர் கொண்ட 2-மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார்
- இந்த கேமரா செட்டப் Realme-யின் LumaColor IMAGE Engine உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது AI செயலாக்கத்தைப் பயன்படுத்தி சரும நிறங்கள், இழைநயங்கள் மற்றும் டைனமிக் ரேஞ்ச் ஆகியவற்றை மேம்படுத்துகிறது.
- இந்த ஸ்மார்ட்போனில் ரியர் செல்ஃபி மிரர் அம்சம் உள்ளது, இது பயனர்கள் பின்புற கேமரா மூலம் செல்ஃபி எடுக்கும்போது தங்களை பற்றிய முன்னோட்டத்தை பார்க்க அனுமதிக்கிறது.
- ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளேவில் பொருத்தப்பட்ட 16-மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது.
- 1115 அல்ட்ரா-லீனியர் ஸ்பீக்கர்
- 400 சதவீத அல்ட்ரா வால்யூம் மோட்
- Hi-Res ஆடியோ சான்றிதழ்
- SBC, AAC, LDAC, aptX, aptX HD, மற்றும் LHDC 5.0 ப்ளூடூத் ஆடியோ கோடெக்குகளை ஆதரிக்கிறது
- 5ஜி VoWiFi, புளூடூத் 5.3, IPv6, GPS, GLONASS, Galileo, QZSS மற்றும் BeiDou
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP69 ரெட்டிங்
- இராணுவத் தர அதிர்ச்சி-எதிர்ப்புசான்றிதழ்
- பாண்டா கிளாஸ் ப்ரொடெக்ஷன்
- முன்பே பொருத்தப்பட்ட ஸ்கிரீன் ப்ரொடெக்டருடன் வருகிறது
- 45W சூப்பர்VOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 8,000mAh பேட்டரி
- பைபாஸ் சார்ஜிங் மற்றும் 6.5W வரையிலான வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங்
- முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் 104 நிமிடங்கள் ஆகும் என்று ரியல்மி தெரிவிக்கிறது
- அளவீட்டில் 166.47 × 78.23 × 8.88 மிமீ மற்றும் எடையில் சுமார் 224 கிராம்


Click it and Unblock the Notifications