Home
Mobile

போட்டான் பாரு.. 8.8 மிமீ பாடியில் 8000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. புது Realme ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனத்தின் பெரிய பேட்டரி மாடலான ரியல்மி 16டி 5ஜி (realme 16T 5G) ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. 8000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், கலர் மற்றும் டிசைன் உள்ளிட்ட முக்கிய பீச்சர்கள் உறுதியாகி இருக்கின்றன. இந்த ரியல்மி 16டி 5ஜி ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

வருகிற மே 22ஆம் தேதியன்று இந்த ரியல்மி 16டி 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ரியல்மி இந்தியா (Realme India) தளங்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இதில் ரியல்மி இந்தியா தளத்தில் முக்கிய பீச்சர்களுடன் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டுள்ளது. இதில் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் டிசைன் விவரங்கள் உறுதியாகி இருக்கின்றன.

போட்டான் பாரு.. 8.8 மிமீ பாடியில் 8000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்!

அரோரா கிரீன் (Aurora Green), ஸ்டார்லைட் ரெட் (Starlight Red) மற்றும் ஸ்டார்லைட் பிளாக் (Starlight Black) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. டூயல் ரியர் கேமராவை பார்க்க முடிகிறது. ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போனில் பார்த்த செல்பீ மிரர் டிசைன் கிடைக்கிறது. பாக்கெட் சைஸ் பில்ட் கிடைக்கிறது. ஆகவே, இந்த பேட்டரி செக்மெண்ட்டில் லைட் வெயிட்டாக இருக்கலாம்.

ரியல்மி 16டி 5ஜி அம்சங்கள் (realme 16T 5G Specifications): 8000mAh பேட்டரி கொண்ட மாடலாக இருக்கிறது. இந்த பேட்டரிக்கு 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், கேமிங் பிரியர்களுக்கு பக்காவாக பொருந்தும், பைபாஸ் சார்ஜிங் (Bybass Charging) கொடுக்கப்பட்டு உள்ளது. 7 வருடத்துக்கு பேட்டரி ஹெல்த் கொடுக்கப்படுகிறது.

பெரிய பேட்டரியாக இருப்பதால், அட்வான்ஸ்டு டெம்ப்ரேச்சர் புரொடெக்சன் (Advanced Temperature Protection), ஓவர் சார்ஜ் புரொடெக்சன் (Overcharge Protection) உள்ளிட்ட பீச்சர்களை கொடுத்துள்ளது. 3 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும் மாடலாக இந்த ரியல்மி 16டி 5ஜி இருக்கிறது. 14.3 மணி நேரங்களுக்கு கேமிங், 21.9 மணி நேரங்களுக்கு நேவிகேஷன் கிடைக்கிறது.

8.88 எம்எம் தடிமன் கொண்ட மாடலாக இருக்கிறது. 6.8 இன்ச் டிஸ்பிளே கிடைக்கிறது. ஆகவே, பெரிய பேட்டரி செக்மெண்ட்டில் பாக்கெட் சைஸ் பாடியை எதிர்பார்க்கலாம். அலுமினியம் அலாய் கேமரா மாடியூல் (Aluminum Alloy Camera Module) கிடைக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளன. மே 22ஆம் தேதி வெளியாக இருப்பதால், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கிடைக்கும்.

மற்ற பீச்சர்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. மார்கெட்டில் கசிந்த பீச்சர்களை பார்க்கையில், மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் கொண்ட மாடலாக இந்த புதிய ரியல்மி 16டி ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வர இருக்கிறது. இது பட்ஜெட்டில் கிடைக்கும் ஜிபியு ஆக இருக்கிறது.

ஆகவே, ரியல்மி 16டி ஸ்மார்ட்போனையும் பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம். முன்னதாக வெளியான ரியல்மி 15டி 5ஜி (Realme 15T 5G) ஸ்மார்ட்போனில் 7000mAh பேட்டரி கிடைத்தது. 60W ஃபாஸ்ட் சார்ஜிங், மீடியாடெக் டைமன்சிட்டி 6400 மேக்ஸ் (MediaTek Dimensity 6400 Max) சிப்செட் மற்றும் 50 எம்பி மெயின் கேமரா வந்தது. ரூ.20,999 பட்ஜெட்டில் கிடைத்தது. ஆகவே, ரூ.21,999 பட்ஜெட்டில் இந்த ரியல்மி 16டி 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாக வாய்ப்புள்ளது.

Best Mobiles in India

English summary
realme 16T 5G With 8000mAh Battery 45W Charging To Launch in India on May 22 Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X