வாங்குனா இப்படி ஒன்ன வாங்கனும்.. SONY கேமரா.. 8000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. IP69 Pro ரேட்டிங்.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனத்தின் மிட்-ரேஞ்ட் மாடலான ரியல்மி 16டி 5ஜி (realme 16T 5G) ஸ்மார்ட்போனின் கேமரா பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. சோனி சென்சார் மட்டுமல்லாமல், லுமாகலர் இமேஜ் என்ஜின் மற்றும் ஏஐ போர்ட்ராய்டு குளோவ் உள்ளிட்ட பீச்சர்களை கொடுக்க இருக்கிறது. இந்த ரியல்மி 16டி 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு, பீச்சர்கள் மற்றும் விலையை இப்போது பார்க்கலாம்.
இந்திய மார்கெட்டில் மே 22ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனால், பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், கலர், டிசைன் உள்ளிட்ட பீச்சர்கள் வரிசையாக உறுதி செய்யப்பட்டு வருகின்றன. பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ரியல்மி இந்தியா (Realme India) தளங்களில் பீச்சர்கள் அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன. இப்போது, கேமரா பீச்சர்கள் உறுதியாகி இருக்கின்றன.

எப்/1.8 அபெர்சர் மற்றும் 50 எம்பி சோனி ஐஎம்எக்ஸ்852 (Sony IMX852) சென்சாருடன் 50 எம்பி பிரைமரி கேமரா கிடைக்கிறது. லுமாகலர் இமேஜ் என்ஜின் (LumaColor IMAGE Engine) கிடைக்கிறது. இது ட்ரூ-டு-லைப் ஸ்கின் டோன் கொடுக்கிறது. ஆகவே, ஷார்ப்டு போர்ட்ராய்டு குவாலிட்டி, போர்ட்ராய்டு ஸ்கின் டெக்ச்சர் பூஸ்டர் கிடைக்கிறது.
மேலும், போர்ட்ராய்டு ஸ்கின் டோனிங் கிடைக்கிறது. செல்பீ மிரர் கொடுத்துள்ளது. ஆகவே, ரியர் கேமராவில் செல்பீ எடுத்து கொள்ளலாம். மேலும், ஏஐ பாப்அவுட் (AI Popout), ஏஐ போர்ட்ராய்டு குளோவ் (Ai Portrait Glow), ஏஐ ஸ்டைல் மீ (Ai StyleMe) மற்றும் ஏஐ லைட் மீ (Ai Light Me) உள்ளிட்ட பீச்சர்களையும் கொடுக்கிறது.
முன்னதாக உறுதி செய்யப்பட்ட பீச்சர்களை பார்க்கையில், 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 8000mAh பேட்டரி கிடைக்கிறது. ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங் (Bybass Charging) கிடைக்கிறது. 7 வருடத்துக்கு பேட்டரி ஹெல்த் மட்டுமல்லாமல், அட்வான்ஸ்டு டெம்ப்ரேச்சர் புரொடெக்சன் மற்றும் ஓவர் சார்ஜ் புரொடெக்சன் கிடைக்கிறது.
பெரிய பேட்டரி கொடுப்பதால் 8.88 எம்எம் தடிமன் கொண்ட பாடி கிடைக்கிறது. அரோரா கிரீன் (Aurora Green), ஸ்டார்லைட் ரெட் (Starlight Red) மற்றும் ஸ்டார்லைட் பிளாக் (Starlight Black) ஆகிய மூன்று கலர்களில் கிடைக்க இருக்கிறது. 6 வருடங்களுக்கு ஸ்மூத் பர்ஃபாமென்ஸ் கிடைக்கிறது. ஏஐ பூஸ்ட் (AI Boost) கொடுக்கப்பட்டுள்ளது.
144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.8 இன்ச் டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. ஐபி69 ப்ரோ (IP69 Pro) ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. மிலிட்டரி கிரேடு ஷாக் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 400 சதவீத அல்ட்ரா சவுண்ட் சப்போர்ட் கிடைக்கிறது.
இந்த பீச்சர்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளன. விலை விவரங்கள் உறுதியாகவில்லை. இருப்பினும், மார்கெட்டில் ரீடெயில் பாக்ஸ் விவரங்கள் கசிந்து, விலையை தெரியப்படுத்தி இருக்கின்றன. ஆகவே, ரூ.55,999 எம்ஆர்பி விலையில் கிடைக்க இருக்கிறது. இருப்பினும், வெளியாகும்போது, குறைவாக இருக்க வாய்ப்புள்ளது.
மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) எதிர்பார்க்கப்படுகிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கலாம். கேமரா மற்றும் பேட்டரி பிரியர்களுக்கு ஏற்ப இந்த ரியல்மி 16டி ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications