Home
Mobile

மொத்த மார்கெட் காத்திருக்கும் ஒத்த போன்.. பட்ஜெட்ல வருகிறது Realme 16T 5G ஸ்மார்ட்போன்.. விலை எப்படி?

ரியல்மி நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான ரியல்மி 16டி 5ஜி (Realme 16T 5G) மாடலின் போஸ்டர் கசிந்துள்ளது. டிசைன் மற்றும் கலர் விவரங்களை பார்க்க முடிகிறது. கேமரா டிசைனும் ஒட்டுமொத்த ரியல்மி பிரியர்களையும் தட்டித்தூக்கி இருக்கிறது. விலை விவரங்களும் கசிந்துள்ளன. இந்த ரியல்மி 16டி 5ஜி மாடலின் விவரங்களை பார்க்கலாம்.

ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை தொடர்ந்து, ரியல்மி 16டி 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாக இருப்பதாக மார்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கு ஏற்ப ரேம், ஸ்டோரேஜ் மற்றும் கலர் விவரங்கள் மார்ச் மாதத்தில் கசிந்தன. ஏப்ரல் மாதத்தில் முதல் வாரத்தில் ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகிவிட்டது. இதனால், 16டி மாடல் மீதான எதிர்பார்ப்பை எகிறியது.

மொத்த மார்கெட் காத்திருக்கும் ஒத்த போன்.. பட்ஜெட்ல வருது Realme 16T!

இப்போது, போஸ்ட் மார்கெட்டில் கசிந்து, எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. ஏனென்றால், இந்த ரியல்மி 16டி ஸ்மார்ட்போனிலும் செல்பீ மிரரை பார்க்க முடிகிறது. அதேபோல ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போனில் கிடைத்த டிசைனும் பார்க்க முடிகிறது. அதே நேரத்தில் அதை விட மாலிவான விலைக்கு வெளியாகும் என்பதால், பட்ஜெட் பிரியர்களையும் வெயிட்டிங் மோடில் வைத்துள்ளது.

முன்னதாக வெளியான விவரங்களின்படி, அரோரா கிரீன் (Aurora Green), ஸ்டார்லிட் பிளாக் (Starlight Black) மற்றும் ஸ்டார்லிட் ரெட் (Starlight Red) ஆகிய கலர்களில் இந்த ரியல்மி 16டி 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால், போஸ்டரில் 2 கலர்கள் மட்டுமே இருக்கின்றன. ஆகவே, அதிகாரப்பூர்வ போஸ்டர் வந்தால் மட்டுமே கலர் விவரங்கள் உறுதி செய்யப்படும்.

டிரிபிள் ரியர் கேமரா டிசைனை கொடுத்துள்ளது. செல்பீ மிரர் இடம்பெற்றுள்ளது. இந்த விவரங்கள் மட்டுமே போஸ்டர் வழியாக தெரியவந்துள்ளது. முன்னதாக வெளியான பீச்சர்களை பார்க்கையில், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் இதில் கிடைக்க இருக்கின்றன.

6.57 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுக்க இருக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 6400 மேக்ஸ் (MediaTek Dimensity 6400 Max) சிப்செட் கொடுக்க இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கிடைக்க இருக்கிறது. ரூ.20,999 பட்ஜெட்டில் வெளியாக இருப்பதாக மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக வெளியான ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போனை பார்க்கலாம்.

ஏனென்றால், இதில் கிடைத்த சில பீச்சர்கள் ரியல்மி 16டி 5ஜி ஸ்மார்ட்போனிலும் இடம்பெற வாய்ப்புள்ளது. 7000mAh பேட்டரி மற்றும் 60W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டுள்ளது. 6.57 இன்ச் (2372 x 1080 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா உள்ளது.

சோனி ஐஎம்எக்ஸ்852 சென்சார் மற்றும் எப்/1.8 அபெசர் கொடுக்கிறது. மேலும், 2 எம்பி மோனோகுரோம் கேமராவில் எப்/2.4 அபெசர் கிடைக்கிறது. 50 எம்பி செல்பீ கேமராவை கொடுக்கிறது. ரூ.31,999 ஆரம்ப விலைக்கு ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகியது. ஆகவே, அதைவிட மலிவான விலைக்கு ரியல்மி 16டி 5ஜி வெளியாக இருக்கிறது. பட்ஜெட் பிரியர்களுக்கு ஏற்ற மாடலாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Realme 16T 5G Poster Leaked Ahead Of Launching in India Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X