Home
Mobile

இன்று விற்பனைக்கு வரும் புதிய Realme 5ஜி போன்.. 8000mAh பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?

ரியல்மி நிறுவனம் கடந்த வாரம் இந்தியாவில் ரியல்மி 16டி 5ஜி (Realme 16T 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் இந்த புதிய ரியல்மி போன் இன்று மதியம் 12 மணி அளவில் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக பிளிப்கார்ட் தளத்தில் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போனை வாங்க முடியும். இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ரியல்மி 16டி 5ஜி அம்சங்கள் (Realme 16T 5G specifications): 6.7-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் ரியல்மி 16டி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இதன் டிஸ்பிேளிவில் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate), 1200 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

இன்று விற்பனைக்கு வரும் புதிய Realme  5ஜி போன்.. எந்த மாடல்? என்ன விலை

தரமான ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் பிராசஸர்(Octa Core MediaTek Dimensity 6300 6nm processor) உடன் ரியல்மி 16டி 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராஸசர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளது.

8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி உடன் ரியல்மி 16டி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில உள்ளது. அதாவது 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய போனில் உள்ளது.

realme UI 7.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 16(Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ரியல்மி 16டி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor)ஆதரவும் இந்த போனில் உள்ளது.

50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்852 பிரைமரி கேமரா + 2எம்பி monochrome சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது புதிய ரியல்மி 16டி 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

1115 அல்ட்ரா-லீனியர் ஸ்பீக்கர், 400 சதவீத அல்ட்ரா வால்யூம் மோட், Hi-Res ஆடியோ சான்றிதழ், யுஸ்பி டைப்-சி ஆடியோ உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த புதிய ரியல்மி போன் வெளியாகி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். அதேபோல் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழ் பெற்றுள்ளது இந்த புதிய போன்.

இன்று விற்பனைக்கு வரும் புதிய Realme  5ஜி போன்.. எந்த மாடல்? என்ன விலை

8000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் ரியல்மி 16டி 5ஜி போன் வெளியாகி உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.3, குளோனாஸ் (GLONASS), ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய போனில் உள்ளன. ஸ்டார்லைட் பிளாக், ஸ்டார்லைட் ப்ளூ மற்றும் ஸ்டார்லைட் ரெட் நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

ரியல்மி 16டி 5ஜி விலை
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 16டி 5ஜி மாடலின் விலை ரூ.29,999-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 16டி 5ஜி மாடலின் விலை ரூ.31,999-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 16டி 5ஜி மாடலின் விலை ரூ.34,999-ஆக உள்ளது.
தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.3000 தள்ளுபடியும் உள்ளது.

Best Mobiles in India

English summary
Realme 16T 5G goes on sale today for the first time in India: check price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X