Realme இறக்கிய இடி.. லேட்டஸ்ட் 7000mAh பேட்டரி போன் முதல் புது பட்ஜெட் 5ஜி போன் வரை.. விலை உயர்வு!
கடந்த வாரம் தான் இந்தியாவில் ரியல்மி 16 ப்ரோ பிளஸ் (Realme 16 Pro Plus) மற்றும் ரியல்மி 16 (Realme 16) ஸ்மார்ட்போன்களின் விலைகள் உயர்த்தப்பட்டன. இப்போது அந்த வரிசையில் மேலும் சில ரியல்மி போன்கள் இணைந்துள்ளன. சுவாரஸ்யமாக விலை உயர்த்தப்படாமல் இருந்த ரியல்மி 16 ப்ரோ (Realme 16 Pro) மாடலின் விலை இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. ரியல்மி 16 மாடலின் விலை மீண்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
ரியல்மி 16 ப்ரோ விலை உயர்வு:
8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் - ரூ.37,999 இல் இருந்து ரூ.40,999 ஆக உயர்வு
8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் - ரூ.40,999 இல் இருந்து ரூ.43,999 ஆக உயர்வு
12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் - ரூ.43,999 இல் இருந்து ரூ.46,999 ஆக உயர்வு

ரியல்மி 16 விலை உயர்வு:
8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் - ரூ.34,999 இல் இருந்து ரூ.35,999 ஆக உயர்வு
8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் - ரூ.37,999 இல் இருந்து ரூ.38,999 ஆக உயர்வு
12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் - ரூ.40,999 இல் இருந்து ரூ.41,999 ஆக உயர்வு
ரியல்மி சி83 5ஜி விலை உயர்வு: கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பட்ஜெட் ரக 5ஜி ஸ்மார்ட்போன் ஆன இது, அறிமுகத்தின்போது ரூ.13,499 க்கு வாங்க கிடைத்தது. பின்னர் அது ரூ.16,499 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது, இதன் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.17,499 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- டூயல் சிம் ஆதரவு
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ரியல்மி யுஐ 7.0 ஓஎஸ்
- மூன்று வருட ஓஎஸ் அப்டேட்கள்
- நான்கு வருட செக்யூரிட்டி அப்டேட்கள்
- 6.57-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் (1080x2372 பிக்சல்ஸ்) AMOLED டிஸ்பிளே
- 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்
- 240Hz டச் சாம்பிளிங் ரேட்
- 100 சதவீத DCI-P3 கலர் கேமட்
- 1.07 பில்லியன் கலர்ஸ்
- 397 பிபிஐ பிக்சல் டென்சிட்டி
- 4200 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ்
- DT ஸ்டார் D+ கவர் கிளாஸ் பாதுகாப்பு
- இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 6400 டர்போ சிப்செட்
- 12GB வரை LPDDR4x ரேம்
- 256GB வரை UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- மாலி G57 MC2 ஜிபியு
- அதிக ஆற்றல் தேவைப்படும் பணிகளின் போது வெப்பநிலையை கட்டுப்படுத்த 6050 சதுர மிமீ வெப்ப வெளியேற்ற பரப்பளவு கொண்ட வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP69 ரேட்டிங்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 50-மெகாபிக்சல் (எப்/1.8) ப்ரைமரி கேமரா
- 2-மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார்
- 50-மெகாபிக்சல் (எப்/2.4) செல்பீ கேமரா
- 1080p/60 fps வரை வீடியோக்களை பதிவு செய்யும் திறன்
- 60W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
- 7000mAh பேட்டரி
- அளவீட்டில் 158.30x75.13x8.10 மிமீ
- எடை சுமார் 183 கிராம்


Click it and Unblock the Notifications