யாரு சாமி அவன்.. 200MP கேமரா.. 7000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. MT சிப்செட்.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?
இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் வெளியாக இருக்கும் ரியல்மி 16 ப்ரோ (Realme 16 Pro) ஸ்மார்ட்போனில் 7000mAh பேட்டரி கிடைக்க இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. ரூ.25,000 பட்ஜெட்டில் 200 எம்பி கேமரா, 7000mAh பேட்டரி கொண்ட மாடலாக இது வெளியாக உள்ளது. இந்த ரியல்மி 16 ப்ரோ ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
வருகிற ஜனவரி 6 ஆம் தேதி இந்த ரியல்மி 16 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு வர உள்ளது. ரூ.25,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக மார்கெட்டில் தகவல்கள் கசிந்தன. இதனால், ரியல்மி 16 ப்ரோ ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்தது. இப்போது, பேட்டரி உறுதியாகி மேலும் பட்டையை கிளப்பியுள்ளது.

இந்தியாவில் அதிக பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு மிகப்பெரும் வரவேற்பு இருக்கிறது. இந்த வரவேற்புக்கு ஏற்றபடி 7000mAh பேட்டரியுடன் ரியல்மி 16 ப்ரோ அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே, கேமரா, சிப்செட், டிஸ்பிளே, கலர் மற்றும் டிசைன் விவரங்கள் வெளியாகி இருந்தது. இப்போது, பேட்டரி விவரங்களும் வெளியாகி இருக்கிறது.
ரியல்மி 16 ப்ரோ அம்சங்கள் (Realme 16 Pro Specifications): 200 எம்பி பிரைமரி கேமராவை இந்த ரியல்மி 16 ப்ரோ ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. லூமாகலர் கேமரா சிஸ்டம் (LumaColor Camera System) கிடைக்கிறது. சாம்சங் எச்பி5 (Samsung HP5) சென்சார் கிடைக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கிடைக்கிறது. 4X லாஸ்லெஸ் ஜூமிங் சப்போர்ட் உள்ளது.
ஹைப்பர்ராவ் அல்கோரிதம் (HyperRAW Algorithm) மற்றும் போர்ட்ராய்டு போட்டோகிராபி (Portrait Photography) என்ஹான்ஸ்மெண்ட் கிடைக்கிறது. ஆகவே, 21 போர்ட்ராய்டு டோன்களுடன் வைப் மாஸ்டர் மோட் (Vibe Master Mode) கிடைக்கிறது. லேட்டஸ்ட் மற்றும் பிரத்யேக பீச்சராக இருக்கும் ஏஐ எடிட் ஜீனீ (AI Edit Genie) இந்த கேமராவுக்கு கிடைக்கிறது.
4கே எச்டிஆர் (4K HDR) வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. பிரீமியமான பர்பாமென்ஸ் கொடுக்கும்படி மீடியாடெக் டைமன்சிட்டி 7300 மேக்ஸ் 5ஜி (MediaTek Dimensity 7300 Max 5G) சிப்செட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்டுள்ளது. 3 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 4 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கிறது.
ரியல்மி யுஐ 7.0 (Realme UI 7.0) இந்த ரியல்மி 16 ப்ரோ ஸ்மார்ட்போனில் வருகிறது. ஏர்ப்ளோவ் விசி கூலிங் சிஸ்டம் (AirFlow VC Cooling System), சூப்பர் பவர் சேவிங் மோட் (Super Power Saving Mode) மற்றும் ஏஐ லாங்-லைப் பேட்டரி சிப் (AI Long-life Battery Chip) உள்ளது. இது பேட்டரி ஹெல்த் மற்றும் கன்ட்ரோல்களுக்காக பிரத்யேகமாக இந்த ரியல்மி 16 ப்ரோ ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது.
7000mAh டைட்டன் பேட்டரியை கொடுத்துள்ளது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1.5K ரெசொலூஷன் கொண்ட அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. மேலும், 1.07 பில்லியன் கலர் டெப்த் மற்றும் 6,500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. IP69 ரேட்டிங் கொண்ட வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் (Water & Dust Resistance) கிடைக்கிறது.
நெக்ஸ்ட் ஏஐ (NEXT AI), ஏஐ ஃபிரேமிங் மாஸ்டர் (AI Framing Master), ஏஐ ரெக்கார்டிங் (AI Recording) மற்றும் கூகுள் ஜெமினி இன்டிகிரேஷன் கிடைக்கிறது. மாஸ்டர் கோல்டு (Master Gold), பெபல் கிரே (Pebble Grey) மற்றும் ஓர்சிட் பர்பிள் (Orchid Purple) ஆகிய கலர்களில் கிடைக்க உள்ளது. ஜனவரி 6ஆம் தேதிக்கு முன்னதாக முழு பீச்சர்களும் வெளியாகி இருக்கிறது.


Click it and Unblock the Notifications








