Home
Mobile

மொத்தமும் இதுக்குத்தான் வெயிட்டிங்.. 7000mAh பேட்டரி.. 200MP கேமரா.. OLED டிஸ்பிளே.. எந்த ஸ்மார்ட்போன்?

மொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டும் வெயிட்டிங் மோடில் இருக்கும்படியான பீச்சர்கள் மற்றும் பட்ஜெட்டில் ரியல்மி 16 ப்ரோ (Realme 16 Pro) வெளியாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள் மார்கெட்டில் வெளியாகி மேலும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டு இருக்கிறது. இந்த ரியல்மி 16 ப்ரோ ஸ்மார்ட்போன் குறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ரியல்மி 16 ப்ரோ அம்சங்கள் (Realme 16 Pro Specifications): இந்த ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் (2772 x 1272 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன் மற்றும் 144 ஹெர்ட்ஸ் ரெப்ஃப்ரெஷ் ரேட் வருகிறது. 200 மெகாபிக்சல் மெயின் கேமரா + 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது.

மொத்தமும் இதுக்குத்தான் வெயிட்டிங்.. 7000mAh பேட்டரி.. 200MP கேமரா!

50 மெகாபிக்சல் செல்பீ கேமரா கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ரியல்மி யுஐ 7 (Realme UI 7) கிடைக்கிறது. சீன மார்கெட்டில் 8 ஜிபி ரேம், 12 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ரேம் வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன. அதேபோல 256 ஜிபி மெமரி, 512 ஜிபி மெமரி மற்றும் 1 டிபி மெமரி கிடைக்க இருக்கிறது. ஆனால், இந்தியாவில் மாறுபடுகிறது.

இந்திய மார்கெட்டில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்க இருக்கிறது. 7000mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் டெனா சர்டிபிகேஷன் (TENAA Certification) வழியாக மார்கெட்டுக்கு தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னதாகவே பெபல் கிரே (Peeble Grey), மாஸ்டர் கோல்டு (Master Gold) மற்றும் ஓர்சிட் பர்பிள் (Orchid Purple) ஆகிய கலர்களில் வெளியாகும் என்பது தெரியவந்தது. இந்த ரியல்மி 16 ப்ரோ ஸ்மார்ட்போன் 2026 ஜனவரி அல்லது பிப்ரவரியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பட்ஜெட்டை பார்க்க முந்தைய மாடலை பார்க்க வேண்டும்.

ஏனென்றால், ரியல்மி 15 ப்ரோ 5ஜி (Realme 15 Pro 5G) ஸ்மார்ட்போன் இந்திய மார்கெட்டில் வெளியாகி விற்பனைக்கும் வந்துவிட்டது. ஆகவே, அதன் பீச்சர்கள் மற்றும் விலையில் இருந்து அப்கிரேட் செய்யப்பட்டே இந்த ரியல்மி 16 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியாகும். ஆகவே, ரியல்மி 15 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ரியல்மி 15 ப்ரோ 5ஜி முக்கிய அம்சங்கள் (Realme 15 Pro 5G Specifications): இந்த ரியல்மி மாடலில் 6.8 இன்ச் (2800 x 1280 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. டிசிஐ பி3 (DCI P3) கலர் காமட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) கிடைக்கிறது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 4என்எம் சிப்செட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் மற்றும் ரியல்மி யுஐ 6.0 உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 7000mAh பேட்டரி, 80W சார்ஜிங் கிடைக்கிறது. ரூ.30,000 பட்ஜெட்டுக்குள் கிடைக்கிறது. ஆகவே, ரியல்மி 16 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.32,000 பட்ஜெட்டில் கிடைக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 16 Pro With 200 Camera 12GB RAM 7000mAh Battery To Launch Soon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X