வாடா செல்லம்.. இந்தியாவே வெயிட்டிங்.. 7000mAh பேட்டரி.. 200எம்பி கேமரா.. 16ஜிபி ரேம்.. எந்த மாடல்?
வரும் 2026 ஜனவரி மாதம் ரியல்மி 16 ப்ரோ (Realme 16 Pro) மற்றும் ரியல்மி 16 ப்ரோ பிளஸ் (Realme 16 Pro Plus) ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது ரியல்மி நிறுவனம். இந்நிலையில் ரியல்மி 16 ப்ரோ பிளஸ் போனின் அம்சங்கள் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது ரியல்மி 16 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ரியல்மி 16 ப்ரோ அம்சங்கள் (Realme 16 Pro Specifications): 6.78-இன்ச் பிளாட் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ரியல்மி 16 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில்1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 7300 (Dimensity 7300) சிப்செட் உடன் இந்த புதிய ரியல்மி போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் ஆப்களை இந்த ஸ்மார்ட்போனில் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரியல்மி 16 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 200எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு சென்சார் ஆகிய கேமராக்கள் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்களும் புதிய ரியல்மி போனில் உள்ளன.
ரயில்மி யுஐ 7 (Realme UI 7) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) மூலம் இந்த ரியல்மி 16 ப்ரோ ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம். அதுவும் இந்த போன் 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் வெளிவரும்.
7000mAh பேட்டரி உடன் ரியல்மி 16 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர் (Stereo Speaker), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த ரியல்மி 16 ப்ரோ ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவும் இந்த புதிய போனில் உள்ளது.
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி, என்எஃப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ரியல்மி 16 ப்ரோ ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.30,000 விலையில் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








