மிரண்டு போவீங்க.. 200MP கேமரா.. 7000mAh பேட்டரி.. ஜன.6 க்கு அப்புறம் இதுதான்.. புது Realme 16 Pro சீரிஸ்!
இந்திய மார்கெட்டில் கேமரா, பேட்டரி மற்றும் டிசைன் ஆகியவற்றில் பட்டையை கிளப்பும் ஸ்மார்ட்போன்களுக்கு வரவேற்பு இருக்கிறது. இதை அப்படியே ரியல்மி 16 ப்ரோ சீரிஸ் (Realme 16 Pro Series) மாடல்களில் அந்த நிறுவனம் களமிறக்கி இருக்கிறது. இப்போது, அறிமுகம் செய்யப்படும் தேதியை வெளியிட்டுள்ளது. இந்த ரியல்மி 16 ப்ரோ சீரிஸ் மாடல்களின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
2026 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி இந்த ரியல்மி 16 ப்ரோ சீரிஸ் வெளியாக இருக்கிறது. ரியல்மி 16 ப்ரோ (Realme 16 Pro) மற்றும் ரியல்மி 16 ப்ரோ பிளஸ் (Realme 16 Pro+) ஆகிய மாடல்கள் இதில் வெளியாக இருக்கின்றன. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. கேமரா, டிசைன் மற்றும் சிப்செட் விவரங்கள் ரியல்மி மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளன.

ரியல்மி 16 ப்ரோ சீரிஸ் அம்சங்கள் (Realme 16 Pro Series Specifications): ஸ்னாப்டிராகன் சிப்செட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்டுள்ளது. 3 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் மற்றும் 4 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி அப்டேட்களை இந்த ரியல்மி 16 ப்ரோ சீரிஸ் கொடுக்கிறது. ரியல்மி யுஐ 7.0 (Realme UI 7.0) கொடுத்துள்ளது.
200 எம்பி போர்ட்ராய்டு மாஸ்டர் சிஸ்டம் கேமரா கிடைக்கிறது. இதில் லூமா கலர் அல்கோரிதம் (Luma Colour Algorithm) கிடைக்கிறது. 10X ஜூமிங் கிடைக்கிறது. நைட் போட்டோகிராபிக்காக 3டி போடான் மேட்ரிக்ஸ், 16 ரிட் ராவ் டொமைன் கம்ப்யூட் போன்ற சப்போர்ட் கொடுக்கிறது. ஏஐ எடிட் ஜீனீ 2.0 (AI Edit Genie 2.0) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இதில் ஏஐ ஸ்டைல்மீ (AI StyleMe), ஏஐ லைட்மீ (AI LightMe) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. 9.3 மணி நேரங்களுக்கு கேமிக் பேக்கப் கொண்ட பேட்டரி கிடைக்க இருக்கிறது. 7000mAh பேட்டரி எதிர்பார்க்கலாம். மாஸ்டர் கோல்டு (Master Gold), மாஸ்டர் கிரே (Master Grey) ஆகிய கலர்களில் வெளியாக இருக்கிறது. மேலும், இந்தியாவுக்காக 2 பிரத்யேக கலர்களும் இருக்கின்றன.
கேமிலியா பிங்க் (Camellia Pink) மற்றும் ஆர்க்கிட் பர்பிள் (Orchid Purple) ஆகிய கலர்கள் வருகின்றன. இது பயோ-பேஸ்டு ஆர்கானிக் சிலிகான் மெட்டீரியலில் பில்ட் செய்யப்பட்ட பேனல்களை கொண்டதாக இருக்கிறது. கேமரா டிசைனும் அரிசோன்டல் மற்றும் வெர்டிகலில் புதுவிதமாக இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே ரியல்மி மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் வெளியாகி இருக்கிறது.
ஜனவரி 6ஆம் தேதி அறிமுகமாக இருப்பதால், இதற்கிடையில் சிப்செட், பேட்டரி கேபாசிட்டி, டிஸ்பிளே போன்ற பீச்சர்கள் வெளியாகும். அதேபோல பட்ஜெட் விவரங்களும் மார்கெட்டில் வெளியாகும். இந்திய மார்கெட்டில் ரியல்மி 15 ப்ரோ வெளியாகிவிட்டது. இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.28,999ஆக இருக்கிறது.
இந்த ரியல்மி 15 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 ( Qualcomm Snapdragon 7 Gen 4) சிப்செட் கிடைத்தது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.8 இன்ச் அமோலெட் டிஸ்பிளே கிடைத்தது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7000mAh பேட்டரி கிடைத்தது. ஆகவே, ரியல்மி 16 ப்ரோ மாடலிலும் 7000mAh பேட்டரி கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








