மிட்-ரேஞ்ச் மிரளுது.. 200MP கேமரா.. 4D கர்வ்ட் டிஸ்பிளே.. 7000mAh பேட்டரி.. 80W பாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் இருக்கும் ஒட்டுமொத்த கேமரா பிரியர்களையும் தட்டித் தூக்கும்படி ரியல்மி 16 ப்ரோ (Realme 16 Pro) மற்றும் ரியல்மி 16 ப்ரோ பிளஸ் (Realme 16 Pro+) ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த ஸ்மார்ட்போன்களின் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் கான்பிகிரேஷன்களுடன் விலை விவரங்கள் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
வருகிற ஜனவரி 6 ஆம் தேதி இந்த ரியல்மி 16 ப்ரோ சீரிஸ் மாடல்கள் வெளியாக இருக்கின்றன. கேமரா, சிப்செட், பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இந்த ஸ்மார்ட்போன்கள் மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல இப்போது விலை விவரங்கள் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது.

டெக் டிப்ஸ்டர் பராஸ் குக்லானி இந்த மாடல்களின் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் கான்பிகிரேஷன்களுடன் விலை பட்டியலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதில் ரியல்மி 16 ப்ரோ ஸ்மார்ட்போனில் மூன்று வேரியண்ட்களும், ரியல்மி 16 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் மூன்று வேரியண்ட்களும் கிடைக்க இருப்பது தெரிகிறது. ஆனால், விலையில் மாற்றங்கள் இருக்கின்றன.
ரியல்மி 16 ப்ரோ விலை (Realme 16 Pro Price): 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.33,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட டாப் வேரியண்ட்டின் விலை ரூ.36,999ஆகவும் இருக்கிறது. மேலும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.31,999ஆக இருக்கிறது.
ரியல்மி 16 ப்ரோ பிளஸ் விலை (Realme 16 Pro+ Price): 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.39,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.41,999ஆகவும் இருக்கிறது. மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.44,999ஆக இருக்கிறது.
இந்த விலையிலேயே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், முன்னதாக ரூ.25,999 பட்ஜெட்டில் ஆரம்ப விலை மாடல் இருக்கும் என்று மார்கெட்டில் பேசப்பட்டது. இதனால், ஓரிரு நாட்களில் புதிய விலைகள் கசிந்துள்ளன. இந்த மாடல்களின் பீச்சர்களும் மிட்-பிரீமியமாக இருப்பதால், விலையும் அதற்கு ஏற்ப இருப்பது தெரிகிறது.
ரியல்மி 16 ப்ரோ, 16 ப்ரோ பிளஸ் அம்சங்கள் (Realme 16 Pro, 16 Pro Plus Specifications): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மற்றும் ரியல்மி யுஐ 7.0 கிடைக்க இருக்கிறது. ரியல்மி 16 ப்ரோ மாடலில் மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட் கிடைக்க இருக்கிறது. ப்ரோ பிளஸ் மாடலில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 (Octa Core Snapdragon 7 Gen 4) சிப்செட் கிடைக்கிறது.
மூன்று ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கிறது. 200 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. ப்ரோ பிளஸ் மாடலில் 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ வருகிறது. 7000mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. ஐபி66, ஐபி68, ஐபி60 மற்றும் ஐபி69கே வாட்டர் ரெசிஸ்டனஸ் கொடுத்துள்ளது.
6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2500Hz இன்ஸ்டன்ட் டச் ரெஸ்பான்ஸ், 4608Hz டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைக்கிறது. இந்த மாடல்களில் மாஸ்டர் கோல்டு (Master Gold), மாஸ்டர் கிரே (Master Grey), கேமிலியா பிங்க் (Camellia Pink) மற்றும் ஓர்ஜிட் பர்பிள் (Orchid Purple) ஆகிய கலர்கள் கிடைக்க இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








