அதிர வைக்கும் விலை.. 200எம்பி கேமரா.. 7000mAh பேட்டரி.. வருகிறது புது Realme 5ஜி போன்.. எந்த மாடல்?
ரியல்மி 16 ப்ரோ பிளஸ் (Realme 16 Pro Plus) ஸ்மார்ட்போன் வரும் 2026 ஜனவரி 6-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு ரியல்மி 16 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி 512ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 16 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.43,999-விலையில் அறிமுகமாகும். மேலும் இதன் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.35,000 விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்போது இந்த ரியல்மி போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

ரியல்மி 16 ப்ரோ பிளஸ் அம்சங்கள் (Realme 16 Pro Plus Specifications): தரமான ஸ்னாப்படிராகன் 7 ஜென் 4 (Snapdragon 7 Gen 4) சிப்செட் உடன் இந்த ரியல்மி 16 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
அதேபோல் 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே உடன் இந்த ரியல்மி 16 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2800 x 1280 பிக்சல்ஸ், 1 மில்லியன் கலர்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) உள்ளிட்ட அம்சங்களும் இந்த போனில் உள்ளன.
குறிப்பாக 200எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் இந்த ரியல்மி 16 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.
அதுவும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி + 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இந்த புதிய ரியல்மி 16 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் இந்த புதிய போனில் உள்ளது.
ரியல்மி 16 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ரியல்மி யுஐ 7 (Realme UI 7) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ரியல்மி ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது.
இந்த ரியல்மி 16 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் 7000எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம்.
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி, என்எஃப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ரியல்மி 16 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








