Home
Mobile

பக்கா பட்ஜெட்டில் பட்டையை கிளப்பும் புது Realme 5ஜி போன்.. 7000mAh பேட்டரி, 12GB ரேம், 200MP கேமரா!

ரியல்மி நிறுவனம் மிகவும் சமீபத்தில் தான் அதன் ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. ஒன்பிளஸ் 15 க்கு போட்டியாக இது ரூ.70,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இது பட்ஜெட் மற்றும் மிட்-ரேன்ஜ் போன்களை எதிர்பார்ப்பவர்களுக்கான மாடல் அல்ல!

அவர்களுக்காக தான் - ரியல்மி 16 ப்ரோ பிளஸ் 5ஜி (Realme 16 Pro Plus 5G) ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதை உறுதி செய்யும்படியாக அது ரியல்மி 16 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலின் ஸ்டோஎஜ் ஆப்ஷன்கள் மற்றும் முக்கிய அம்சங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளன.

பக்கா பட்ஜெட்டில் பட்டையை கிளப்பும் புது Realme 5ஜி போன்!

ரியல்மி 16 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் மற்றும் கலர் ஆப்ஷன்கள்: தொழில்துறை ஆதாரங்களை மேற்கோள் காட்டி, 91மொபைல்ஸ் ஹிந்தி (91Mobiles Hindi) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, ரியல்மி 16 ப்ரோ பிளஸ் 5ஜி ஆனது இந்தியாவில் மொத்தம் 4 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகமாகும்.

பேஸிக் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஆப்ஷனுடன் 8ஜிபி + 256ஜிபி, 12ஜிபி + 256ஜிபி மற்றும் 12ஜிபி + 512ஜிபி ஆப்ஷன்களும் அறிமுகம் செய்யப்படலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் Camellia Pink, Master Gold மற்றும் Master Grey ஆகிய 3 கலர்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ரியல்மி 16 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: முக்கிய அம்சங்களை பொறுத்தவரை ரியல்மி 16 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 200 மெகாபிக்சல் ரியாத் கேமரா மற்றும் 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறலாம். மேலும் இது 7000mAh பேட்டரி மற்றும் 1.5K ரெசல்யூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் OLED டிஸ்பிளேவையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன விலைக்கு வரலாம்? பெயர் குறிப்பிடுவது போலவே ரியல்மி 16 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது, கடந்தஜனவரி மாதம் அறிமுகமான ரியல்மி 14 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலின் அப்கிரேடட் வெர்ஷன் ஆகும். நினைவூட்டும் வண்ணம் இது ரூ.29,999 என்கிற ஆரம்ப விலையில் வெளியானது. ஆக ரியல்மி 16 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலும் பெரும்பாலும் ரூ.30,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் தான் இருக்கும். இது ரூ.30,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கலாம்.

புதிதாக அறிமுகமான ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.72,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதே ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.78,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதோடு அறிமுகமான ஆஸ்டன் மார்ட்டின் ரேசிங் கிரீன் எடிஷனின் 16ஜிபி ரேம் + 512 ஜிபி ஆப்ஷன் ரூ.79,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.79-இன்ச் QHD+ (1440 x 3136 பிக்சல்ஸ்) AMOLED பிளெக்சிபில் டிஸ்பிளே
- குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- ட்ரிபிள் ரியர் கேமரா
- 50-மெகாபிக்சல் (எப்/1.8) Ricoh GR ஆன்டி-கிளேர் ப்ரைமரி கேமரா
- 50 மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா
- 120எக்ஸ் டிஜிட்டல் ஜூம் திறன்களை கொண்ட 200-மெகாபிக்சல் (எப்/2.6) டெலிஃபோட்டோ கேமரா
- 32 மெகாபிக்சல் (எப்/2.4) செல்பீ கேமரா
- 7000mAh பேட்டரி
- 120W மற்றும் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 16 Pro Plus 5G Tipped to pack 7000mah battery 12GB RAM 200MP camera India Launch Soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X