2026-ன் முதல் ஹிட்டு.. 7000mAh பேட்டரி, 200MP கேமரா உடன் புதிய Realme 5ஜி போன்.. என்ன விலை?
ரியல்மி (Realme) நிறுவனம் வருகிற ஜனவரி 6 ஆம் தேதி அன்று, அதன் ரியல்மி 16 ப்ரோ சீரீஸ் (Realme 16 Pro Series) ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த சீரிஸின் கீழ் ரியல்மி 16 ப்ரோ 5ஜி மற்றும் ரியல்மி 16 ப்ரோ பிளஸ் 5ஜி என மொத்தம் 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாக இவ்விரு ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை விவரங்கள் குறித்த சில தகவல்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளன. டெக் பிளாக்கர் ஆன பராஸ் குக்லானியின் கூற்றுப்படி,ரியல்மி 16 ப்ரோ 5ஜி (Realme 16 Pro 5G) ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.31,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

இதே ஸ்மார்ட்போன் மேலும் இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வெளியாகும் என்றும் பராஸ் குக்லானி குறிப்பிட்டுளார். 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.33,999 ஆகவும், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.36,999 ஆகவும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ரியல்மி 16 ப்ரோ பிளஸ் 5ஜி (Realme 16 Pro Plus 5G) ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட பேஸிக் ஆப்ஷன் ரூ.39,999 க்கு கிடைக்கும் என்றும், 8ஜிபி + 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல் ரூ.41,999 க்கு கிடைக்கும் என்றும் குறிப்பிட்ட டிப்ஸ்டர் வழியாக தகவல் கிடைத்துள்ளது. ஹை-எண்ட் வேரியண்ட் ஆன 12ஜிபி + 256ஜிபி மாடல் ரூ.44,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.
மேற்கண்ட விலைகள் மற்றொரு அறிக்கை உடனும் ஒத்துப்போகின்றன. அது ரியல்மி 16 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலின் பாக்ஸ் விலை ரூ.43,999 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாக்ஸ் விலைகள் எப்போதும் இறுதி விற்பனை விலையை விட சற்று அதிகமாக இருப்பதால், நமக்கு கிடைத்குள்ள இந்த லேட்டஸ்ட் தகவல் சற்று நம்பத்தகுந்ததாக தெரிகிறது. சரியான விலை வெளியீட்டு நாளில் (ஜன.6) அறிவிக்கப்படும்.
இதே விலைகளை சற்று முன்னோக்கி பார்க்க, அதாவது கடந்த ஜூலை 2025 இல் அறிமுகம் செய்யப்பட்டதா ரியல்மி 15 ப்ரோ சீரீஸ் (Realme 15 Pro Series) ஸ்மார்ட்போன்களின் விலைகளுடன் ஒப்பிட்டு பார்த்தால் குறைந்தது ரூ.8000 வரையிலான விலை அதிகரிப்பை காண முடிகிறது.
நினைவூட்டும் வண்ணம் ரியல்மி 15 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.31,999 க்கு தொடங்கி அதிகபட்சமாக 12ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.38,999 வரை சென்றது.
ஆனால் இந்த சீரிஸில் ப்ரோ பிளஸ் வேரியண்ட் எதுவும் இல்லை. அதற்கு முன்பு, ஜனவரி 2025 இல் வந்த ரியல்மி 14 ப்ரோ பிளஸ் அறிமுகம் ஆனது. இது ரூ.29,999 ஏங்கிய ஆரம்ப விலை நிர்ணயத்தை பெற்று இருந்தது. ஆக ப்ரோ பிளஸ் வேரியண்ட் ஆனது கிளியர் ஆன ரீ-என்ட்ரியை கொடுக்கிறது. அதேசமயம் ரூ.40000 க்கு அருகிலான விலை நிர்ணயத்தையும் தொடுகிறது.
என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இந்த இரண்டு போன்களிலும் 7,000mAh பேட்டரி மற்றும் 200MP பிரைமரி கேமரா இருக்கும் என்பதை ரியல்மி உறுதிப்படுத்தி உள்ளது. ரியல்மி 16 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட் கொண்டு இயங்கும், அதே நேரத்தில் ரியல்மி 16 ப்ரோ 5ஜி மாடல் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 7300-மேக்ஸ் சிப்செட் கொண்டு இயங்கும்.


Click it and Unblock the Notifications








