Home
Mobile

யாரு சாமி அவன்.. 200MP கேமரா.. 7000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. புது எடிஷன்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் 200 எம்பி கேமரா, 7000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட சார்ஜிங், அமோலெட் டிஸ்பிளே உள்ளிட்ட பீச்சர்களுடன் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்ற ரியல்மி 16 ப்ரோ (Realme 16 Pro) ஸ்மார்ட்போனின் ஹாரி பாட்டர் எடிஷன் (Harry Potter Edition) இப்போது வெளியாகி இருக்கிறது. பீச்சர்கள் மற்றும் விலையை தெரிந்து கொள்ளலாம்.

கடந்த ஜனவரி மாதத்தில் ரியல்மி 16 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியாகியது. மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் பிரீமியம் பீச்சர்களுடன் கிடைத்ததால், விற்பனையிலும் வரவேற்பை பெற்றது. இப்போது, ஹாரி பாட்டர் எடிஷனில் அல்ட்ரா பிரீமியம் லுக்குடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. டிசைனை தவிர பீச்சர்களில் பெரும்பாலும் மாற்றங்கள் செய்யப்படவில்லை.

யாரு சாமி அவன்.. 200MP கேமரா.. 7000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. மாடல்?

குவாட்ரா லைட்-சென்சிங் கலர் சேஞ்சிங் டெக் (Quadra Light-Sensing Color-Changing Tech) கொண்ட பேக் பினிஷிங் கிடைக்கிறது. ஹாக்வார்ட்ஸ் கிரெஸ்ட் மற்றும் மெட்டல் மிரர் கேமரா டெகோ கிடைக்கிறது. ஹாரி பாட்டருக்கு ஏற்ப யுஐ அப்கிரேட் செய்யப்பட்டு இருக்கிறது. ஐகான், வால்பேப்பர், கேமரா பில்டர்களும் கிடைக்கின்றன.

ரியல்மி 16 ப்ரோ ஹாரி பாட்டர் எடிஷன் (Realme 16 Pro Harry Potter Edition Specifications): 6.8 இன்ச் (2800 x 1280 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 4608Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் ஏஜிசி டிடி ஸ்டார் டிபிளஸ் (AGC DT star D+) புரொடெக்சன் கிடைக்கிறது.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 மேக்ஸ் 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 Max 4nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கிடைக்கிறது. ரியல்மி யுஐ 7.0 உள்ளது. 200 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது.

சாம்சங் எச்பி5 சென்சார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 50 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவில் ஓவி50டி40 (OV50D40) சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது. இதிலும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது.

80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த பேட்டரி இருந்தும் IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங், IP69 ரேட்டிங் மற்றும் IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) ஆகிய கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த ரியல்மி 16 ப்ரோ ஹாரி பாட்டர் எடிஷனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.62,999 ஆக இருக்கிறது. ரூ.6,300 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.56,699 விலைக்கு கிடைக்க இருக்கிறது. பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி தளத்தில் நாளை பிற்பகல் 12 மணி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. 5000 யூனிட்கள் மட்டுமே விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன.

Best Mobiles in India

English summary
Realme 16 Pro Harry Potter Edition With 200MP Camera Launched in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X