2026 ஜன.6 வரை எந்த 5G போனும் வாங்கிடாதீங்க.. கம்மி விலையில் 7000mAh, 200எம்பி Realme போன் வருது!
ரியல்மி நிறுவனம் அதன் ரியல்மி 16 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் 4 அற்புதமான கலர் ஆப்ஷன்களை வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை பிரபல டிசைனர் நாவோடோ ஃபுகாசாவா வடிவமைத்து உள்ளார். இதே டிசைனர் தான் 2021 ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷனிலும் பணியாற்றினார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது
டிசைன் மட்டுமல்ல அம்சங்களும் பக்கா மாஸ்: ரியல்மி 16 ப்ரோ ஸ்மார்ட்போனில் டிசைன் மட்டுமே ஸ்பெஷல்-ஆ என்று கேட்டால் - அப்படி எல்லாம் இல்லை; இந்த ஸ்மார்ட்போன் பல "வெயிட்டான" அம்சங்களுடன் வரும். ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போனின் பெரும்பாலான அம்சங்கள் ஆன்லைனில் லீக் ஆகி இருந் நிலையில், தற்போது சிப்செட் குறித்த விவரமும் வெளியாகியுள்ளது.

ரியல்மி 16 ப்ரோ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 1.5கே ரெசல்யூஷன் உடனான 6.78-இன்ச் OLED டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட் (MediaTek Dimensity 7300 Chipset)
- 200 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா
- 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ரியல்மி யுஐ 7
- 7000mAh பேட்டரி
- 80W அடாப்டர் வழியிலான பாஸ்ட் சார்ஜிங்
- அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display fingerprint sensor)
- ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster)
எப்போது அறிமுகம்? என்ன விலைக்கு வரலாம்? இது ஜனவரி 6, 2025 அன்று அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வரவில்லை. ரியல்மி 16 ப்ரோ சீரீஸ் 5ஜி-க்கான தயாரிப்பு பக்கம் ஏற்கனவே நேரலையில் உள்ளதால், எப்படி பார்த்தாலும் இது 2026 ஜனவரியில் அறிமுகமாகி விடும். விலை ரூ.30,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் இருக்கலாம்.
டிசம்பர் 16 அறிமுகமாகும் ரியல்மி நார்சோ 90 சீரிஸ்: ரியல்மி நிறுவனம் நாளை (டிசம்பர் 16 ஆம் தேதி) ரியல்மி நார்சோ 90 சீரீஸ் (Realme Narzo 90 Series) ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த சீரீஸின் கீழ் ரியல்மி நார்சோ 90 (Realme Narzo 90) மற்றும் ரியல்மி நார்சோ 90எக்ஸ் (Realme Narzo 90x) என்கிற 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம்.
எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, ரியல்மி நார்சோ 90 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது கார்பன் பிளாக் மற்றும் விக்டரி கோல்ட் கலர் ஆப்ஷன்களில் வரும். இது 6GB + 128GB, 8GB + 128GB, 8GB + 256GB மற்றும் 12GB + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகம் செய்யப்படலாம்
ரியல்மி நார்சோ 90 5ஜி மாடல் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் FHD+ OLED டிஸ்பிளே, 50 மெகாபிக்சல் ப்ரைமரி ரியர் கேமரா, மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட் (MediaTek Dimensity 7300 SoC) மற்றும் 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,500mAh பேட்டரி ஆகிய அம்சங்களை பேக் செய்யலாம்.
ரியல்மி நார்சோ 90 5ஜி சீரீஸ் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? இந்தியாவில் ரியல்மி நார்சோ 90 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.20,000 க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுகையில் உள்ள ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.17,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம். சரியான விலை விவரங்கள் டிசம்வர் 16 அன்று நடக்கும் வெளியீட்டு நிகழ்வில் அறிவிக்கப்படும்.


Click it and Unblock the Notifications








