Home
Mobile

SALE வெளுக்குது.. ரூ.3,025 ஆஃபரில் 200MP கேமரா.. 7000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. 144Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனத்தின் 200 எம்பி கேமரா மாடல்களாக ரியல்மி 16 ப்ரோ சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் ரியல்மி 16 ப்ரோ 5ஜி (Realme 16 Pro 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. 200 எம்பி கேமரா மட்டுமல்லாமல், 7000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களை கொண்டுள்ளது. இந்த ரியல்மி 16 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் தள்ளுபடி விவரங்களை பார்க்கலாம்.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 8 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.31,999 விலைக்கு 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.3,025 தள்ளுபடியும் கிடைக்கிறது. ஆகவே, ரூ.28,974 விலைக்கு இந்த ரியல்மி 16 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

SALE வெளுக்குது.. ரூ.3,025 ஆஃபரில் 200MP கேமரா.. 7000mAh பேட்டரி!

ரியல்மி 16 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Realme 16 Pro 5G Specifications): 6.8 இன்ச் (2800 x 1280 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை இந்த ரியல்மி 16 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 144 Hz ரெஃப்ரெஷ் ரேட், 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 4608Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைத்துள்ளது. மேலும், 240 Hz டச் சாம்பிளிங் ரேட், 450 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிது.

1.07 பில்லியன் கலர் டெப்த் உள்ளது. 100 சதவீத டிசிஐ பி3 கலர் காமட் (DCI P3 Color Gamut) மற்றும் டிசி டிம்மிங் (DC Dimming) கிடைக்கிறது. ஏஜிசி டிடி ஸ்டார் டிபிளஸ் (AGC DT Star D+) புரொடெக்சன் கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 மேக்ஸ் 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 Max 4nm) சிப்செட்டை இந்த ரியல்மி 16 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) உள்ளது. மேலும், ரியல்மி யுஐ 7.0 (Realme UI 7.0) கொடுக்கப்பட்டு உள்ளது. டூயல் நானோ சிம் சப்போர்ட் கிடைக்கிறது. 200 எம்பி கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) இந்த ரியல்மி 16 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது. மெயின் கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது.

ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கிடைக்கிறது. சாம்சங் எச்பி5 (Samsung HP5) சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைத்துள்ளது. இந்த கேமராவுக்கு ஓம்னிவிஷன் ஓவி08டி10 (OV08D10) சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது. வீடியோ கால்கள் மற்றும் செல்பீகளுக்காக 4K ரெக்கார்டிங்குடன் 50 எம்பி செல்பீ உள்ளது.

80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரியை இந்த ரியல்மி 16 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. பெரிய பேட்டரி கிடைத்தும், 7.75 எம்எம் தடிமன் கொடுத்துள்ளது. 192 கிராம் எடை கொண்டுள்ளது. இன்-டிஸ்பிளே ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (In-display Optical Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது. இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கிடைத்துள்ளது.

அல்ட்ரா பிரீமியம் மாடல்களில் கிடைப்பதை போலவே IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங், IP69 ரேட்டிங் மற்றும் IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) கிடைக்கிறது. கோல்டு (Gold), கிரே (Grey) மற்றும் பர்பிள் (Purple) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 16 Pro 5G With 200MP Camera Gets 8 Percent Discount on Flipkart Check Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X