இனி ரூட்டு தல Realme தான்.. 7000mAh பேட்டரி, 200MP கேமரா.. 2 புதிய 5G போன்கள் அறிமுகம்.. ஜன.9 முதல் விற்பனை!
ரியல்மி (Realme) நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களாக ரியல்மி 16 ப்ரோ சீரீஸ் (Realme 16 Pro Series) மாடல்கள் இன்று (ஜனவரி 6) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த சீரீஸின் கீழ் ரியல்மி 16 ப்ரோ மற்றும் ரியல்மி 16 ப்ரோ பிளஸ் என்கிற 2 மாடல்கள் வெளியாகியுள்ளன.
ரியல்மி 16 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்க்ளின் விலை மற்றும் விற்பனை தேதி: இந்தியாவில் ரியல்மி 16 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேஸிக் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.31,999 க்கும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஆப்ஷன் ரூ.33,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடைசியாக உள்ள ரியல்மி 16 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஹை-எண்ட் ஆப்ஷன் ரூ.36,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அறிமுக சலுகையாக, தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.3,000 உடனடி வங்கி தள்ளுபடி கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மறுகையில் உள்ள ரியல்மி 16 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனும் மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேஸிக் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.39,999 க்கும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஆப்ஷன் ரூ.41,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
கடைசியாக உள்ள ரியல்மி 16 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஹை-எண்ட் ஆப்ஷன் ரூ.44,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் மீது அறிமுக சலுகையாக, தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.4,000 உடனடி வங்கி தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு புதிய ரியல்மி ஸ்மார்ட்போன்களும் வருகிற ஜனவரி 9 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ரியல்மி (Realme) ஆன்லைன் ஸ்டோர் வழியாக இந்தியாவில் விற்பனைக்கு வரும். கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை ரியல்மி 16 ப்ரோ 5ஜி ஆனது Master Gold, Pebble Grey மற்றும் Orchid Purple ஆப்ஷன்களிலும், ப்ரோ பிளஸ் மாடலானது Master Gold, Master Grey மற்றும் Camellia Pink ஆப்ஷன்களிலும் வாங்க கிடைக்கும்.
- இரண்டிலுமே ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ரியல்மி UI 7.0 ஓஎஸ்
- இரண்டிலுமே டூயல் சிம் ஆதரவு
- ப்ரோ [பிளஸ் மாடலில் 6.8-இன்ச் 1,280x2,800 பிக்சல்ஸ் AMOLED டிஸ்பிளே (144Hz வரை ரெஃப்ரெஷ் ரேட், 240Hz வரை டச் சாம்ப்ளிங் ரேட், 6500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 100 சதவீதம் DCI-P3 கலர் கேமட் மற்றும் 1.07 பில்லியன் கலர்ஸ்)
- ப்ரோ மாடலில் சற்று சிறிய 6.78-இன்ச் 1,272x2,772 பிக்சல்ஸ் டிஸ்பிளே (1400 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 450 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, ரேட், 6500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 100 சதவீதம் DCI-P3 கலர் கேமட்)
- ப்ரோ பிளஸ் மாடலில் குவால்காம் ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட்
- ப்ரோ மாடலில் ஆக்டா கோர் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 மேக்ஸ் 5ஜி சிப்செட்
- இரண்டிலுமே தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66 + IP68 + IP69 + IP69K ரேட்டிங்ஸ்
- இரண்டிலுமே 200-மெகாபிக்சல் (எப்/1.8) பிரைமரி கேமரா
- ப்ரோ மாடலில் 8-மெகாபிக்சல் (எப்/2.2) அல்ட்ராவைடு கேமரா
- ப்ரோ பிளஸ் மாடலில் 50-மெகாபிக்சல் (எப்/2.8) அல்ட்ராவைடு கேமரா
- இரண்டிலுமே 50-மெகாபிக்சல் (எப்/2.4) செல்பீ கேமரா
- ப்ரோ பிளஸில் 60fps வரை 4K வீடியோ ரெக்கார்ட் ஆதரவு
- இரண்டிலுமே 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 7,000mAh டைட்டன் பேட்டரி
- இரண்டிலுமே 5ஜி, 4ஜி LTE, வைஃபை 6, ப்ளூடூத் 5.4 மற்றும் USB டைப்-சி போர்ட்


Click it and Unblock the Notifications








