Home
Mobile

மொத்த இந்தியா மிரளுது.. ரூ.25,000 பட்ஜெட்ல 200MP கேமரா.. 3 OS அப்டேட்.. MT சிப்செட்.. புது Realme 16 ப்ரோ!

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் ஓரிரு வாரங்களில் வெளியாக இருக்கும் ரியல்மி 16 ப்ரோ (Realme 16 Pro) மற்றும் ரியல்மி 16 ப்ரோ பிளஸ் (Realme 16 Pro+) ஆகிய மாடல்களின் விலை விவரங்கள் வெளியாகி உள்ளது. 200 எம்பி கேமரா கொண்ட பட்ஜெட் விலை மாடலாக இருக்கப் போகின்றன. இந்த ரியல்மி 16 ப்ரோ சீரிஸ் (Realme 16 Pro Series) மாடல்களின் முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஒட்டுமொத்த கேமரா பிரியர்களையும் மிரளவிடும்படியான போர்ட்ராய்டு மற்றும் பெரிஸ்கோப் கேமரா சிஸ்டம் கொண்ட மாடல்களாக இந்த ரியல்மி 16 ப்ரோ சீரிஸ் வெளியாக இருக்கிறது. வருகிற ஜனவரி 6 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. ஏற்கனவே, கேமரா, சிப்செட், டிசைன், கலர் மற்றும் ஓஎஸ் அப்டேட் போன்ற பீச்சர்கள் வெளியாகின.

மொத்த இந்தியா மிரளுது.. ரூ.25,000 பட்ஜெட்ல 200MP கேமரா.. 3 OS அப்டேட்!

இப்போது, விலை விவரங்கள் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. இந்த விலையானது பட்ஜெட் பிரியர்கள் மட்டுமல்லாமல், மிட்-ரேஞ்ச் பிரியர்களையும் வெயிட்டிங் செய்ய வைத்துள்ளது. ரியல்மி 16 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.25,000 பட்ஜெட்டில் இருந்து ரூ.30,000 பட்ஜெட்டில் வெளியாக இருக்கிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட ஆரம்ப வேரியண்ட்டை இதில் எதிர்பார்க்கலாம்.

மேலும், ரியல்மி 16 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.35,000 பட்ஜெட்டில் இருந்து ரூ.40,000 பட்ஜெட்டில் வெளியாக உள்ளது. இதிலும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வேரியண்ட் ஆரம்ப விலை மாடலாக இருக்கும். இந்த விலை விவரங்களை டிப்ஸ்டர் தேபயன் ராய் அவரது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். 200 எம்பி கேமராவுடன் கிடைக்க இருப்பதால் கவனம் பெற்றுள்ளது.

ரியல்மி 16 ப்ரோ சீரிஸ் அம்சங்கள் (Realme 16 Pro Series Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட் ரியல்மி 16 ப்ரோ மாடலில் கிடைக்கிறது. ஸ்னாப்டிராகன் சிப்செட் ரியல்மி 16 ப்ரோ பிளஸ் மாடலில் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ரியல்மி யுஐ 7.0 (Realme UI 7.0) கொண்டுள்ளது. 3 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் கொடுக்கிறது.

மேலும், 4 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. 200 எம்பி மெயின் கேமரா கொண்ட ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. போர்ட்ராய்டு மற்றும் பெரிஸ்கோப் கிடைக்க இருக்கிறது. மேலும், ஜூமிங் பீச்சர்கள் பிரீமியமாக கிடைக்க இருக்கின்றன. லூமா கலர் அல்கோரிதம் (Luma Colour Algorithm) மற்றும் ஏஐ எடிட் ஜீனீ 2.0 (AI Edit Genie 2.0) உள்ளது.

50 எம்பி பெரிஸ்கோப் கேமரா ரியல்மி 16 ப்ரோ பிளஸ் மாடலில் கிடைக்கிறது. ஆல் ஜூமிங் சப்போர்ட் கொண்டுள்ள 4K எச்டிஆர் வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. லைவ்லி மோட், விவிட் மோட், எம்ரால்டு மோட், ப்ரஸ் மோட் மற்றும் நியான் மோட் போன்ற கேமரா பீச்சர்களை கொடுத்துள்ளது. மேலும், ஏஐ இன்ஸ்டன்ட் கிளிப் (AI Instant Clip) சப்போர்ட் கிடைக்கிறது.

மாஸ்டர் கோல்டு (Master Gold), மாஸ்டர் கிரே (Master Grey) இருக்கிறது. மேலும், கேமிலியா பிங்க் (Camellia Pink) மற்றும் ஆர்க்கிட் பர்பிள் (Orchid Purple) ஆகிய கலர்களில் இந்த ரியல்மி 16 ப்ரோ சீரிஸ் கிடைக்க இருக்கிறது. அமேசான் தளத்தில் ரியல்மி 16 ப்ரோ சீரிஸ் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இந்த மாடல்களுடன் ரியல்மி பட்ஸ் ஏர்8 மாடலும் கிடைக்க இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 16 Pro 16 Pro Plus Price Tipped Ahead Of India Launch on January 6 Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X