யாரு சாமி அவன்.. 4 OS அப்டேட்.. 6 வருட செக்யூரிட்டி.. 200MP கேமரா.. 7000mAh பேட்டரி.. 80W சார்ஜ்.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடல்களான ரியல்மி 16 ப்ரோ (Realme 16 Pro) மற்றும் ரியல்மி 16 ப்ரோபிளஸ் (Realme 16 Pro+) மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு மற்றும் செக்யூரிட்டி அப்டேட்களானது, அப்கிரேட் செய்யப்பட்டு உள்ளன. இந்தியாவில் வெளியானபோது, கிடைத்ததை விட கூடுதலாக கிடைக்க உள்ளது. இந்த ஓஎஸ் அப்டேட் பாலிசி குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ரியல்மி 16 ப்ரோ சீரிஸ் மாடல்கள் கடந்த ஜனவரி 6ஆம் இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டன. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டது. மேலும், 3 ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கொடுக்கப்பட்டன. ஆனால், இப்போது, ரியல்மி நிறுவனம் இதை கூடுதலாக்கி இருக்கிறது.

ஆகவே, 4 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கொடுக்கப்பட உள்ளன. ஆகவே, கிட்டத்தட்ட ஆண்ட்ராய்டு 20 ஓஎஸ் (Android 20 OS) வரையில் பெற்று கொள்ளலாம். மேலும், 2032 ஆம் ஆண்டு வரையில் செக்யூரிட்டி அப்டேட்களும் கொடுக்கப்படும். இது புதிய மற்றும் பழைய கஸ்டமர்களுக்கும் பொருந்தும்.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மட்டுமல்லாமல், ரியல்மி யுஐ 7.0 (realme UI 7.0) கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் வைப் மாஸ்டர் ப்ரோ (Vibe Master Mode), ஏஐ எடிட் ஜீனீ (AI Edit Genie), ஏஐ ஸ்டைல் மீ (AI StyleMe) மற்றும் ஏஐ லைட் மீ (AI LightMe) உள்ளிட்ட கேமரா பீச்சர்கள் கிடைக்கின்றன. நெக்ஸ்ட் ஏஐ (NEXT AI), ஏஐ டிரான்ஸ்லேஷன் (AI Translation) போன்ற பீச்சர்களும் உள்ளன.
ரியல்மி 16 ப்ரோ அம்சங்கள் (Realme 16 Pro Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 மேக்ஸ் 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 Max 4nm) சிப்செட்டை கொண்டுள்ளது. மேலும், மாலி ஜி615 ஜிபியு கிராபிக்ஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. 6.8 இன்ச் (2800 x 1280 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொடுக்கப்பட்டு உள்ளது.

144 Hz ரெஃப்ரெஷ் ரேட், 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் 4608Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. 200 எம்பி மெயின் கேமரா மற்றும் எச்பி5 சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது. 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. இதில் ஓம்னிவிஷன் சென்சார் உள்ளது. 50 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இதிலும் ஓம்னிவிஷன் சென்சார் உள்ளது.
7000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது. IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங், IP69 ரேட்டிங் மற்றும் IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.39,999ஆக இருக்கிறது. கிரே (Grey), பர்பிள் (Purple) மற்றும் கோல்டு (Gold) ஆகிய கலர்களில் வாங்கி கொள்ளலாம்.
ரியல்மி 16 ப்ரோபிளஸ் அம்சங்கள் (Realme 16 Pro+ Specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 4 4nm) சிப்செட் கொடுக்கப்பட்டு உள்ளது. 6.8 இன்ச் (1280 x 2800 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே, 200 எம்பி மெயின் கேமரா, 50 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 80W சார்ஜிங், 7000mAh பேட்டரி உள்ளது. ரூ.39,999 ஆரம்ப விலைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications