இதுக்கு தான் இந்தியாவே வெயிட்டிங்.. செல்பீ மிரர்.. வருகிறது புதிய Realme 5ஜி போன்.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனம் விரைவில் ரியல்மி 16 5ஜி (Realme 16 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது ரியர் கேமராக்களுக்கு அடுத்ததாக ஒரு பிரத்யேக செல்பீ மிரர் கொண்ட ரியல்மி போனின் டீசர் தற்போது இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஏற்கனவே உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட செல்பீ மிரர் அம்சம் கொண்ட ரியல்மி 16 5ஜி போன் தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
குறிப்பாக ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும் இந்த புதிய ரியல்மி 16 5ஜி போனின் சிறப்பு அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ரியல்மி 16 5ஜி அம்சங்கள் (Realme 16 5G Specifications): ரியல்மி 16 5ஜி 6.57-இன்ச் ஃபுல் எச்டி பிளெக்சிபில் அமோலெட் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. இதன் டிஸ்பிளேவில் 4200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1,080x2,372 பிக்சல்ஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.
தரமான ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 டர்போ சிப்செட் (octa core MediaTek Dimensity 6400 Turbo chipset) ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி Monochrome கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த ரியல்மி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. செல்பீ மிரர், போர்ட்ரெய்ட், நைட் போர்ட்ரெய்ட், சினிமாடிக், ஸ்லோ மோஷன், டூயல்-வியூ வீடியோ, ஆட்டோஃபோகஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
அதுவும் ரியல்மி யுஐ 7.0 (Realme UI 7.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) மூலம் ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக IP66+IP68+IP69+IP69K தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டுள்ளது ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போன். இந்த போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor) வசதியும் உள்ளது.

ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போனில் 7000mAh பேட்டரி வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 60W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன.
மேலும் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ் (GPS), பெய்டோ (BeiDou), குளோனாஸ் (GLONASS, கலிலியோ (Galileo) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன. அதேபோல் இந்த போனின் எடை 183 கிராம் ஆகும்.பிளாக் கிளவுட் ( Black Cloud) மற்றும் ஒயிட் ஸ்வான் (White Swan) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். மேலும் இந்த போன் இந்தியாவில் ரூ.35,000 அல்லது ரூ.40,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications








