Home
Mobile

இதுக்கு தானே வெயிட்டிங்... செல்பீ மிரர், 7000mAh பேட்டரி, 8.1 மிமீ ஸ்லிம் டிசைன்.. புதிய Realme 5ஜி போன்!

ரியல்மி நிறுவனம் அதன் அடுத்த-புதிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயாராக உள்ளது. அது ரியல்மி 16 5ஜி (Realme 16 5G) ஸ்மார்ட்போன் ஆகும். ஹைலைட் ஆன விஷயம் என்னவென்றால் - இது கூகுள் பிக்சல் போன்கள் மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் ஐபோன் ஏர் ஆகியவற்றில் காணப்படும் அதே டிசைன் லேங்குவேஜை பின்பற்றி, பேக் பேனலில் "கிடைமட்டமாக" உட்பொதிக்கப்பட்ட கேமரா பார்-ஐ கொண்டுள்ளது

இன்னும் சுவாரசியமாக ரியர் கேமராக்களுக்கு அடுத்ததாக ஒரு பிரத்யேக செல்பீ மிரர்-ஐ ஒருங்கிணைக்கிறது. இதன் மூலம் ரியல்மி நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனில் அதன் சொந்த திருப்பத்தையும் சேர்க்கிறது. இந்த ஸ்மார்ட்போன் வியட்நாமிய சில்லறை விற்பனையாளரின் வலைத்தளத்தில பட்டியலிடப்பட்டுள்ளது, ஆக அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாகவே இந்த ஸ்மார்ட்போனை பற்றி - கிட்டத்தட்ட அனைத்து விவரங்களும் வெளியாகிவிட்டன.

செல்பீ மிரர், 7000mAh பேட்டரி.. புதிய Realme 5ஜி போன்!

ரியல்மி 16 ஸ்மார்போனின் 'லீக்டு' அம்சங்கள்: ரியல்மி 16 ஸ்மார்ட்போன் ஆனது ஃபுல் எச்டி பிளஸ் ரெசல்யூஷன் மற்றும் மென்மையான 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை வழங்கும் 6.57-இன்ச் AMOLED டிஸ்பிளேவுடன் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பேனல் 4,500 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸை வழங்கும் என்று கூறப்படுகிறது, இது வெளிப்புற பயன்பாட்டிற்கு (நேரடி சூரிய ஒளியின் கீழ் பயன்படுத்த) ஏற்றதாக இருக்கும்

கூடவே இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவானது AGC DT-Star D+ ஷீல்ட் கிளாஸால் பாதுகாக்கப்படுகிறது. பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக இது இன்-ஸ்கிரீன் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரையும் கொண்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை ரியல்மி 16 ஸ்மார்ட்போன் ஆனது செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 50 மெகாபிக்சல் முன்பக்க கேமராவை கொண்டுள்ளது

பின்புறத்தில், இது 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை லென்ஸுடன் இணைக்கப்பட்ட 50 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் கொண்ட டூயல் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ரியல்மி யுஐ 7 உடன் வரும். சிப்செட்டை பொறுத்தவரை ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போனை இயக்குவது மீடியா டெக் டைமன்சிட்டி 6400 டர்போ சிப்செட் ஆகும்.

இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி அல்லது 12 ஜிபி ரேம் உடன் கிடைக்கும், இது 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக ஸ்டோரேஜ் விரிவாக்கமும் ஆதரிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று அதன் பெரிய 7,000 எம்ஏஎச் பேட்டரி ஆகும், இது 60W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

கனெக்டிவிட்டி அம்சங்களை பொறுத்தவரை ரியல்மி 16 ஸ்மார்ட்போன் ஆனது வைஃபை, புளூடூத் 5.3, NFC, ஒரு IR பிளாஸ்டர் மற்றும் ஒரு USB-C போர்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது. ஒரு பெரிய பேட்டரியை பேக் செய்தாலும், இது மெலிதான 8.1 மிமீ ப்ரொபைலை பராமரிக்கிறது மற்றும் 183 கிராம் எடையை கொண்டுள்ளது. கடைசியாக இந்த போன் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66, IP68, IP69, மற்றும் IP69K மதிப்பீடுகளையும் கொண்டுள்ளது.

ரியல்மி 16 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: ரியல்மி 16 ஸ்மார்ட்போன் ஆனது 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்பதை பட்டியல் வெளிப்படுத்துகிறது: 8ஜிபி ரேம் + 256ஜிபி மற்றும் 12ஜிபி + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இது Air Black மற்றும் Air White ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் அறிமுகப்படுத்தப்படும். இந்த ஸ்மார்ட்போன் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 முதல் கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது, இது அதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியாக தெரிகிறது. விலை விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 16 5G with New Camera Design Full Specifications Leaked Expected to launch in February 2
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X