அறிமுகமானது புதிய Realme 5ஜி போன்.. 7000mAh பேட்டரி.. செல்பி மிரர்.. எந்த மாடல்? என்ன விலை?
ரியல்மி நிறுவனம் புதிய ரியல்மி 16 5ஜி (Realme 16 5G 5G) ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக செல்பி மிரர் அம்சத்துடன் இந்த புதிய போன் வெளியாகி உள்ளது. இப்போது ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ரியல்மி 16 5ஜி அம்சங்கள் (Realme 16 5G 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 டர்போ சிப்செட் (octa core MediaTek Dimensity 6400 Turbo chipset) சிப்செட் உடன் ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

ரியல்மி 16 5ஜி போன் 6.57-இன்ச் ஃபுல் எச்டி பிளெக்சிபில் அமோலெட் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 4200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1,080x2,372 பிக்சல்ஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.
செல்பி மிரர் ஆதரவுடன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி Monochrome கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த ரியல்மி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. போர்ட்ரெய்ட், நைட் போர்ட்ரெய்ட், சினிமாடிக், ஸ்லோ மோஷன், டூயல்-வியூ வீடியோ, ஆட்டோஃபோகஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
அதேபோல் ரியல்மி யுஐ 7.0 (Realme UI 7.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுவும் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor) வசதியும் உள்ளது.
ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போன் 7000mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 60W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன.
5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ் (GPS), பெய்டோ (BeiDou), குளோனாஸ் (GLONASS, கலிலியோ (Galileo) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன. அதேபோல் இந்த போனின் எடை 183 கிராம் ஆகும்.பிளாக் கிளவுட் ( Black Cloud) மற்றும் ஒயிட் ஸ்வான் (White Swan) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

ரியல்மி 16 5ஜி விலை: 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 16 5ஜி மாடலின் விலை ரூ.31,999-ஆக உள்ளது. மேலும் இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.33,999 விலையிலும், 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.36,999 விலையிலும் வாங்க முடியும்.
பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி ஆன்லைன் ஸ்டோர் மூலம் இந்த புதிய ரியல்மி 16 5ஜி போனை வாங்க முடியும். வரும் ஏப்ரல் 5-ம் தேதி முதல் இந்த போன் விற்பனைக்கு வரும். மேலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு வங்கி சலுகையும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications







