Home
Mobile

இந்தியாவையே மிரள விட போகும் புதிய Realme 5ஜி போன்.. 7000mAh பேட்டரி.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?

கடந்த ஜனவரி மாதம் ரியல்மி 16 5ஜி (Realme 16 5G) ஸ்மார்ட்போன் வியட்நாமில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த ரியல்மி 16 5ஜி மாடல் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது இந்த மாதம் இறுதியில் அல்லது ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போது ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

இந்தியாவையே மிரள விட போகும் புதிய Realme 5ஜி போன்.. எந்த மாடல்?

ரியல்மி 16 5ஜி அம்சங்கள் (Realme 16 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 டர்போ சிப்செட் (octa core MediaTek Dimensity 6400 Turbo chipset) ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்

6.57-இன்ச் ஃபுல் எச்டி பிளெக்சிபில் அமோலெட் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது ரியல்மி 16 5ஜி . மேலும் இதன் டிஸ்பிளேவில் 4200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1,080x2,372 பிக்சல்ஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

அதேபோல் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி Monochrome கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த ரியல்மி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. போர்ட்ரெய்ட், நைட் போர்ட்ரெய்ட், சினிமாடிக், ஸ்லோ மோஷன், டூயல்-வியூ வீடியோ, ஆட்டோஃபோகஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

ரியல்மி யுஐ 7.0 (Realme UI 7.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) மூலம் ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

IP66+IP68+IP69+IP69K தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டுள்ளது ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போன். இந்த போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor) வசதியும் உள்ளது.

இந்தியாவையே மிரள விட போகும் புதிய Realme 5ஜி போன்.. எந்த மாடல்?

7000mAh பேட்டரி வசதி ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 60W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன.

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ் (GPS), பெய்டோ (BeiDou), குளோனாஸ் (GLONASS, கலிலியோ (Galileo) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன. அதேபோல் இந்த போனின் எடை 183 கிராம் ஆகும்.பிளாக் கிளவுட் ( Black Cloud) மற்றும் ஒயிட் ஸ்வான் (White Swan) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். மேலும் இந்த போன் இந்தியாவில் ரூ.40,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 16 5G to launch in India soon: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X