Home
Mobile

அப்படி போடு.. ரூ.20000 பட்ஜெட்ல iPhone Air டிசைனில், 7000mAh பேட்டரி உடன் புது Realme 5ஜி போன்.. என்ன மாடல்?

வழக்கமாக ரியல்மி (Realme) நிறுவனமானது ரெட்மி, ஒப்போ, விவோ ஆகிய பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களை தான் வம்பிற்கு இழுக்கும். இம்முறை ஆப்பிளை வம்பிற்கு இழுப்பது போல் தெரிகிறது. ரியல்மி ஆனது இந்தியாவில் தனது நம்பர் சீரீஸின் கீழ் ஒரு புதிய 5ஜி போனை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.

என்ன மாடல்? ரியல்மி 16 ப்ரோ மற்றும் ரியல்மி 16 ப்ரோ பிளஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தை தொடர்ந்து இந்நிறுவனம் விரைவில் ரியல்மி 16 5ஜி (Realme 16 5G) மாடலை அறிமுகப்படுத்தக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே BIS (இந்திய தரநிலைகள் பணியகம்) சான்றிதழில் காணப்பட்டுள்ளது. இது இந்திய வெளியீடு வெகு தொலைவில் இல்லை என்பதை குறிக்கிறது.

அப்படி போடு.. ரூ.20000 பட்ஜெட்ல iPhone Air டிசைனில், 7000mAh பேட்டரி!

ஐபோன் ஏர் டிசைனில் ரியல்மி 16 5ஜி: ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரியல்மி ஏர் டிசைன் (Realme Air Design) என்று விளம்பரப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இது மிகவும் ஸ்லிம் ஆன மற்றும் எடை குறைவான வடிவமைப்பை பெறலாம். அதாவது ஆப்பிளின் சமீபத்திய ஐபோன் ஏர் மாடலின் வடிவமைப்பாலும், கூகுள் பிக்சல் மாடல்களில் உள்ள கேமரா வடிவமைப்பாலும் ஈர்க்கப்பட்டு இருக்கலாம்.

வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 6.57-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே
- 120Hz வரை ரெஃப்ரெஷ் ரேட்
- 4200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 50MP ப்ரைமரி கேமரா மற்றும் 2MP மோனோக்ரோம் கேமரா
- 50MP செல்பீ கேமரா

- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட Realme UI 7 ஓஎஸ்
- 12GB வரை LPDDR4x ரேம்
- 256GB UFS 2.2 ஸ்டோரேஜ்
- மீடியாடெக் டைமன்சிட்டி 6400 டர்போ சிப்செட்
- 60W பாஸ்ட் சார்ஜிங்
- 7000mAh பேட்டரி
- IP66, IP68, IP69 மற்றும் IP69K ரேட்டிங்

எப்போது அறிமுகம், என்ன விலை? முன்னரே குறிப்பிட்டபடி இது BIS பட்டியல்களில் இடம்பெற்றுள்ளது. ஆக வரும் வாரங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலையை பொறுத்தவரை இது போட்டித்தன்மையுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்ப கால அறிக்கைகள், இது ரூ.20,000 முதல் ரூ.25,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம் என்கின்றன

ஏற்கனவே வாங்க கிடைக்கும் ரியல்மி 16 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்க்ளின் விலை விவரங்கள்: இந்தியாவில் ரியல்மி 16 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேஸிக் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.31,999 க்கும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஆப்ஷன் ரூ.33,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

கடைசியாக உள்ள ரியல்மி 16 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஹை-எண்ட் ஆப்ஷன் ரூ.36,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மறுகையில் உள்ள ரியல்மி 16 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனும் மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பேஸிக் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.39,999 க்கும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஆப்ஷன் ரூ.41,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது கடைசியாக உள்ள ரியல்மி 16 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஹை-எண்ட் ஆப்ஷன் ரூ.44,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 16 5G Tipped to get iPhone Air Like Design and 7000mAh Battery India Launch Soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X