Home
Mobile

இந்தியாவை மிரள விட போகும் Realme.. செல்பீ மிரர்.. 7000mAh பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?

ரியல்மி 16 5ஜி (Realme 16 5G) ஸ்மார்ட்போனை வரும் ஏப்ரல் 2-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது ரியல்மி நிறுவனம். இந்த போன் ஏற்கனவே உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு விலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

இந்தியாவை மிரள விட போகும் Realme..  செல்பீ மிரர்.. எந்த மாடல்?

ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.31,999 விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.36,999- என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி 16 5ஜி அம்சங்கள் (Realme 16 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 டர்போ சிப்செட் (octa core MediaTek Dimensity 6400 Turbo chipset) ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

ரியல்மி 16 5ஜி 6.57-இன்ச் ஃபுல் எச்டி பிளெக்சிபில் அமோலெட் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. இதன் டிஸ்பிளேவில் 4200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1,080x2,372 பிக்சல்ஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி Monochrome கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. செல்பீ மிரர், போர்ட்ரெய்ட், நைட் போர்ட்ரெய்ட், சினிமாடிக், ஸ்லோ மோஷன், டூயல்-வியூ வீடியோ, ஆட்டோஃபோகஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

ரியல்மி யுஐ 7.0 (Realme UI 7.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) மூலம் ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

IP66+IP68+IP69+IP69K தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டுள்ளது ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போன். இந்த போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor) வசதியும் உள்ளது.

இந்தியாவை மிரள விட போகும் Realme..  செல்பீ மிரர்.. எந்த மாடல்?

7000mAh பேட்டரி வசதி ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 60W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன.

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ் (GPS), பெய்டோ (BeiDou), குளோனாஸ் (GLONASS, கலிலியோ (Galileo) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன. அதேபோல் இந்த போனின் எடை 183 கிராம் ஆகும்.பிளாக் கிளவுட் ( Black Cloud) மற்றும் ஒயிட் ஸ்வான் (White Swan) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 16 5G price leaked ahead of India launch on April 2: Check Details Here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X