Realme ருத்ர தாண்டவம்.. ஆபர் விலையில் புது 5ஜி போன் SALE.. 7000mAh பேட்டரி, IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?
ரியல்மி (Realme) நிறுவனத்தின் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போனாகவும், ரியல்மி 16 சீரீஸின் மூன்றாவது மாடலாகவும் அறிமுகமான ரியல்மி 16 5ஜி (Realme 16 5G) மாடலின் இந்திய விற்பனை தொடங்கியுள்ளது. என்ன விலை? என்ன ஆபர்? என்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:
ரியல்மி 16 5ஜி முக்கிய அம்சங்கள்: மீடியாடெக் டைமென்சிட்டி 6000-சீரிஸ் சிப்செட் மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன், 7000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 60W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவையும் கொண்டுள்ளது. இந்த புதிய ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமரா யூனிட்டுடன் வருகிறது. ரியர் கேமரா மாட்யூலுக்குள் வைக்கப்பட்டுள்ள செல்ஃபி மிரரையும் கொண்டுள்ளது.

ரியல்மி 16 5ஜி விலை: இந்தியாவில் ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் கொண்ட பேஸிக் வேரியண்ட்டின் விலை ரூ.31,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷனிலும் வாங்க கிடைக்கிறது, அதன் விலை ரூ.33,999 ஆகும். கடைசியாக டாப்-ஆஃப்-தி-லைன் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் உள்ளது. அதன் விலை ரூ.36,999 ஆகும். இது பிளிப்கார்ட் வழியாக ஏர் பிளாக் மற்றும் ஏர் ஒயிட் கலர்களில் வாங்க கிடைக்கிறது.
ரியல்மி 16 5ஜி விற்பனை சலுகைகள்: அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகள் மூலம் இஎம்ஐ திட்டங்களில் ரூ.3,000 வரை உடனடி தள்ளுபடியை ரியல்மி நிறுவனம் வழங்குகிறது. மாற்றாக, வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனின் மீது ரூ.2,000 வங்கித் தள்ளுபடி மற்றும் யுபிஐ தள்ளுபடியுடன் வாங்கலாம். மேலும் 12 மாதங்கள் வரையிலான இஎம்ஐ விருப்பங்களும் உள்ளன; கூடுதலாக ரூ.1,000 எக்ஸ்சேஞ்ச் போனஸையும் பெறலாம்.
ரியல்மி 16 5ஜி அம்சங்கள்:
- டூயல் சிம் ஆதரவு
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ரியல்மி யுஐ 7.0 ஓஎஸ்
- மூன்று வருட ஓஎஸ் அப்டேட்கள்
- நான்கு வருட செக்யூரிட்டி அப்டேட்கள்
- 6.57-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் (1080x2372 பிக்சல்ஸ்) AMOLED டிஸ்பிளே
- 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்
- 240Hz டச் சாம்பிளிங் ரேட்
- 100 சதவீத DCI-P3 கலர் கேமட்
- 1.07 பில்லியன் கலர்ஸ்
- 397 பிபிஐ பிக்சல் டென்சிட்டி
- 4200 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ்
- DT ஸ்டார் D+ கவர் கிளாஸ் பாதுகாப்பு
- இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 6400 டர்போ சிப்செட்
- 12GB வரை LPDDR4x ரேம்
- 256GB வரை UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- மாலி G57 MC2 ஜிபியு
- அதிக ஆற்றல் தேவைப்படும் பணிகளின் போது வெப்பநிலையை கட்டுப்படுத்த 6050 சதுர மிமீ வெப்ப வெளியேற்ற பரப்பளவு கொண்ட வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP69 ரேட்டிங்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 50-மெகாபிக்சல் (எப்/1.8) ப்ரைமரி கேமரா
- 2-மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார்
- 50-மெகாபிக்சல் (எப்/2.4) செல்பீ கேமரா
- 1080p/60 fps வரை வீடியோக்களை பதிவு செய்யும் திறன்
- 60W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
- 7000mAh பேட்டரி
- அளவீட்டில் 158.30x75.13x8.10 மிமீ
- எடை சுமார் 183 கிராம்


Click it and Unblock the Notifications








