Home
Mobile

ஆஜா ஆஜா Realme ராஜா.. 8.1மிமீ ஏர் டிசைனில் 7000mAh பேட்டரி, IP69 உடன் புதிய 5ஜி போன்.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனம் அதன் அடுத்த புதிய 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகத்தை உறுதிப்படுத்தி உள்ளது. அது ரியல்மி 16 5ஜி (Realme 16 5G) மாடலாகும். கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் முக்கிய அம்சங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன

ரியல்மி 16 5ஜி அம்சங்கள்: ஃபிளிப்கார்ட்டில் உள்ள பிரத்யேக மைக்ரோசைட் வழியாக, ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஏர் பிளாக் (Air Black) மற்றும் ஏர் ஒயிட் (Air White) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆஜா ஆஜா Realme ராஜா.. 8.1மிமீ ஏர் டிசைனில் 7000mAh பேட்டரி, IP69!

கூடவே இந்த ஸ்மார்ட்போன் 7,000mAh பேட்டரியுடன் வரும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இது 60W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், ஏஐ ஸ்மார்ட் சார்ஜிங் (AI Smart Charging) மற்றும் ஏஐ ஸ்மார்ட் பவர் சேவிங் மோட் (AI Smart Power Saving mode) ஆகியவற்றுக்கான ஆதரவை வழங்குமென்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ரியல்மி நிறுவனம் இதை - 7000mAh பேட்டரியை பேக் செய்யும் மிகவும் ஸ்லிம் ஆன ஸ்மார்ட்போன் என்கிறது. அளவீட்டில் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 8.1 மிமீ தடிமன் மற்றும் 183 கிராம் எடையை கொண்டிருக்கிறது. இதற்கு பின்னால் "ஏர்கிராஃப்ட் ஸ்ட்ரக்சர்" என்று அழைக்கப்படும் ஒரு தொழில்நுட்பம் உள்ளதாக கூறுகிறது. இது அடிப்படையில், பேட்டரியின் உள்ளே மிகவும் இறுக்கமாக அடுக்கப்பட்டிருப்பதிலும், அதிக ஆற்றல் அடர்த்தி கொண்ட பேட்டரி செல்களிலும் கவனம் செலுத்துகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி லைஃப் குறித்த சில சுவாரசியமான விவரங்களும் பகிரப்பட்டுள்ளது. அதன்படி ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது சிங்கிள் சார்ஜில் வாட்ஸ்அப்பில் சுமார் 21.67 மணிநேரம் சாட் செய்ய அனுமதிக்கும், இன்ஸ்டாகிராமில் சுமார் 22.86 மணிநேரம் வரை ரீல்ஸ் பார்க்க அனுமதிக்கும், யூட்யூபில் சுமார் 22.06 மணிநேரம் வரை வீடியோ பார்க்க அனுமதிக்கும் அல்லது சுமார் ஆறு நாட்கள் மியூசிக் கேட்க அனுமதிக்கும்.

மேலும் 1600 சார்ஜ் சுழற்சிகளுக்கு (Charging Cycles) பிறகும் அல்லது ஆறு வருட பயன்பாட்டிற்கு பிறகும் கூட ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போனின் பேட்டரி தொடர்ந்து பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என்றும் ரியல்மி நிறுவனம் கூறுகிறது. ஓஎஸ்-ஐ பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான Realme UI 7.0 கொண்டு இயங்கும் என்பதும், இதற்கு 3 வருட ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை ரியல்மி 16 5ஜி ஆனது 6.57-இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இது 4200 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், 3000ஹெர்ட்ஸ் "இன்ஸ்டன்ட்டேனியஸ்" டச் சாம்பிளிங் ரேட், 2160ஹெர்ட்ஸ் PWM டிம்மிங் மற்றும் 1.07 பில்லியன் கலர்களை வழங்கும். இந்த ஸ்மார்ட்போனில் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP69 ரேட்டிங்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நினைவூட்டும் வண்ணம், ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போன் ஆட்டு கடந்த ஜனவரி மாதத்திலேயே வியட்நாமில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. இப்போது இந்திய சந்தைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் க்ளோபல் வேரியண்ட்டில் மீடியாடெக் டைமென்சிட்டி 6400 டர்போ சிப்செட், 12GB வரையிலான ரேம் மற்றும் 256GB வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ், 50 மெகாபிக்சல் + 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் கேமராவை உள்ளடக்கிய டூயல் ரியர் கேமரா செட்டப் ஆகிய அம்சங்கள் உள்ளன.

OPINION - ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போனை காத்திருந்து வாங்கலாமா? இதுவரை வெளிப்படுத்தப்பட்ட எல்லா அம்சங்களும் "இம்ப்ரெஸிவ்" ஆக உள்ளன. ஒருவேளை ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது நம்பகமான செயல்திறன், திறமையான பவர் மேனேஜ்மென்ட் மற்றும் திறன்மிக்க கேமரா செட்டப்பை வழங்கினால், ஒருமுறை சார்ஜ் செய்தால் ஒரு நாளுக்கு மேல் நீடிக்கும் ஸ்டைலான மற்றும் "கைக்கு அடக்கமான" கச்சிதமான ஸ்மார்ட்போனை விரும்பும் பயனர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கக்கூடும். முதலில் வரட்டும், விலையை பார்ப்போம். பின்னர் மறுபடியும் பேசுவோம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 16 5G 7000mAh Battery IP69 Rating Colour Options Confirmed Ahead India Launch Can We Wait
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X