Home
Mobile

தூக்குங்கடா அந்த தங்கத்த.. வெறும் ரூ.14,999 பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 12GB ரேம்.. எந்த மாடல்?

ரியல்மி 15எக்ஸ் 5ஜி (Realme 15X 5G) ஸ்மார்ட்போனுக்கு ஆர்டருக்கு மேல் ஆர்டர் குவியும்படியான தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் மிலிட்டரி கிரேடு புரொடெக்சன் மட்டுமல்லாமல், 7000mAh பேட்டரி, 60W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த ரியல்மி 15எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

6 ஜிபி ரேம் (6 ஜிபி விர்ச்சுவல்) + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்கின்றன. இதில் 6 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.15,000 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது. அதாவது, இந்த வேரியண்ட்டின் ரூ.16,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.2,000 பேங்க் தள்ளுபடி போக கிடைக்கிறது.

தூக்குங்கடா அந்த தங்கத்த.. வெறும் ரூ.14,999 பட்ஜெட்ல 7000mAh பேட்டரி!

ஆகவே, ரூ.14,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். எஸ்பிஐ கிரெடிட் மூலம் ஆர்டர் செய்தால், இந்த பேங்க் தள்ளுபடி கிடைக்கும். யுபிஐ பரிவர்த்தனையில் வாங்கினால், ரூ.1,050 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.15,949 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். அதேபோல 8 ஜிபி ரேம் மடாலுக்கும் பேங்க் தள்ளுபடி மற்றும் யுபிஐ தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.

ரியல்மி 15எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme 15X 5G Specification): இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் ஆனது MIL-STD 810H மிலிட்டரி கிரேடு சர்டிபிகேஷனுடன் அதிக டியூரபிலிட்டி கொண்ட மாடலாக இருக்கிறது. மேலும், IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கிறது. ஆகவே, லிக்விட்ஸ் புரொடெக்சன், டெம்ப்ரேச்சர் புரொடெக்சன் கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் கொடுக்கப்படுகிறது. மேலும், ஆர்ம் மாலி ஜி57 ஜிபியு (Arm Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஏஐ பீச்சர்களுடன் ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) கிடைக்கிறது. 2 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட் கொடுக்கப்படுகிறது.

இந்த ரியல்மி 15எக்ஸ் 5ஜி மாடலுக்கு 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.8 இன்ச் (1570 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 1200 நிட்ஸ் பீக் பிரைட்ன்ஸ் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும், ஏஐ அவுட்டோர் மோட் (Al Outdoor Mode) மற்றும் ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே சப்போர்ட் கிடைக்கிறது.

50 எம்பி மெயின் கேமரா + செகண்டரி லென்ஸ் கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்கிறது. மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்852 (Sony IMX852) மற்றும் 4096 x 3072 ரெசொலூஷன் கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு ஏஐ எடிட் ஜீனீ (Al Edit Genie) மற்றும் அண்டர்வாட்டர் மோட் (UNDERWATER Mode) போன்ற பிரீமியம் சப்போர்ட் கிடைக்கிறது.

இந்த ரியல்மி 15எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 50 எம்பி செல்பீ கேமரா கேமரா கிடைக்கிறது. இதில் ஓம்னிவிஷன் ஓவி50டி40 (OV50D40) சென்சார் கிடைக்கிறது. ஏஐ லேண்ட்ஸ்கேப் (AI Landscape), ஏஐ அல்ட்ரா கிளாரிட்டி 2.0 (AI Ultra Clarity 2.0), ஏஐ எரைசர் 2.0 (AI Eraser 2.0), ஏஐ மோஷன் டீபிளர் (AI Motion Deblur), ஏஐ கிளார் ரீமூவர் (AI Glare Remover) கிடைக்கிறது.

இதுபோக ஏஐ பூஸ்ட் (AI Boost), பிரைவசி சேப் (Privacy Safe) மற்றும் மினி கேப்சூல் (Mini Capsul) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. 60W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த ரியல்மி 15எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் அக்வா ப்ளூ (Aqua Blue), மரைன் ப்ளூ (Marine Blue) மற்றும் மெரூன் ரெட் (Maroon Red) ஆகிய கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 15x 5G With 7000mAh Battery Available At Rs 14999 in Flipkart Sale Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X