மொத்த ஆஃபரும் இந்த ஒத்த போனுக்கு போதும்.. ரூ.15,999-க்கு 7000mAh பேட்டரி.. 60W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் ரியல்மி 15எக்ஸ் 5ஜி (Realme 15X 5G) போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் 7000mAh பேட்டரி கொடுப்பது மட்டுமல்லாமல், 60W ஃபாஸ்ட் சார்ஜிங், சோனி சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா, IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ஸ் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் கொண்ட இந்த ரியல்மி 15எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை பார்க்கலாம்.
6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.16,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1,000 பேங்க் தள்ளுபடி போக விற்பனைக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.15,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.1,800 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. ரூ.10,840 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது.

ரியல்மி 15எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme 15X 5G Specification): இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் (1570 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும், 1200 நிட்ஸ் பீக் பிரைட்ன்ஸ் மற்றும் ஏஐ அவுட்டோர் மோட் (Al Outdoor Mode) கிடைக்கிறது.
ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் மற்றும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் ஆர்ம் மாலி ஜி57 ஜிபியு (Arm Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) கிடைக்கிறது. ஏஐ எடிட் ஜீனீ (Al Edit Genie), சாப்ட் லைட் பில்டர் (Soft Light Filter) உள்ளது.
இந்த ரியல்மி 15எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் சோனி ஐஎம்எக்ஸ்852 (Sony IMX852) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. ஓம்னிவிஷன் ஓவி50டி40 (OV50D40) சென்சாருடன் 50 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவில் சினிமா மோட் (Cinema Mode), டூயல் வியூ வீடியோ (DUAL-View Video) மற்றும் அண்டர்வாட்டர் மோட் (UNDERWATER Mode) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன.

மேலும், ஏஐ லேண்ட்ஸ்கேப், ஏஐ அல்ட்ரா கிளாரிட்டி 2.0, ஏஐ எரைசர் 2.0 போன்ற பீச்சர்களும் கிடைக்கின்றன. அண்டர்வாட்டர் மோட் கிடைப்பதால், இதில் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. இதுபோக MIL-STD 810H மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கிடைக்கிறது. டிஸ்பிளேவுக்கு ஸ்மார்ட் டச் சப்போர்ட் கிடைக்கிறது.
இந்த ரியல்மி 15எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 7000mAh பேட்டரி மற்றும் 60W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், 6.5W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. இதுபோக 80W சார்ஜிங் அடாப்டர் கொடுக்கப்படுகிறது. 8 ஜிபி ரேம் வேரியண்ட்டில் 10 ஜிபிக்கா விர்ச்சுவல் ரேம் கிடைக்கிறது. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom-ported Speakers) கிடைக்கிறது.
சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கிடைக்கிறது. இந்த ரியல்மி 15எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனானது, கிரிஸ்டல் வேவ் டிசைன் (Crystal Wave Design) மற்றும் பல்ஸ் லைட் (Pulse Light) கொடுக்கிறது. இந்த டிசைனில் அக்வா ப்ளூ (Aqua Blue), மரைன் ப்ளூ (Marine Blue) மற்றும் மெரூன் ரெட் (Maroon Red) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








