அக்டோபர் 1 வரை எந்த போனும் வாங்காதீங்க.. 7000mAh பேட்டரி.. 60W சார்ஜிங்.. வருகிறது புது Realme போன்..
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி 15எக்ஸ் 5ஜி (Realme 15x 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது ரியல்மி இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியான தகவலின்படி, வரும் அக்டோபர் 1-ம் தேதி இந்த புதிய ரியல்மி 15எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான ரியல்மி 15எக்ஸ் 5ஜி அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
ரியல்மி 15எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme 15x 5G specifications): ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் ரியல்மி 15எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

அதேபோல் 50எம்பி ஏஐ சோனி மெயின் கேமரா + செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ரியல்மி 15எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. எனவெ இந்த ஸ்மார்ட்போன் துல்லியமான புகைப்படங்கள் மற்றம் வீடியோக்களை எடுக்க முடியும்.
குறிப்பாக எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் IP68 & IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் ரியல்மி 15எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் இந்த ஸ்மார்ட்போனின் பாதுகாப்பு அம்சங்களுக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம்.
12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் ரியல்மி 15எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ரியல்மி போனில் உள்ளது.
ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ரியல்மி 15எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display fingerprint sensor)வசதியும் இந்த ரியல்மி போனில் உள்ளது.
7000mAh பேட்டரி உடன் ரியல்மி 15எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 60W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் உள்ளது. எனவே இந்த போனின் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த ரியல்மி 15எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் மேம்பட்ட ஏஐ அம்சங்கள் இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அதுவும் MIL-STD 810H இராணுவ-தர நீடித்துழைப்பு சான்றிதழையும் கொண்டு இந்த ரியல்மி 15எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் 5ஜி, டூயல் 4ஜ வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், கலிலியோ, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, ரூ.15000 பட்ஜெட்டில் இந்த புதிய ரியல்மி போன் அறிமுகமாகும்.


Click it and Unblock the Notifications