Home
Mobile

அமேசான் சுதந்திர தின விற்பனை 2026.. 7000mAh பேட்டரி.. IP69 ரேட்டிங்.. ஆஃபரில் ரியல்மி 5ஜி போன்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் அமேசான் கிரேட் ஃபிரீடம் சேல் 2026 (amazon great freedom sale 2026) ) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. அதேபோல் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ரியல்மி 5ஜி போன் ஒன்று தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

அதாவது அமேசானில் நடைபெறும் சுதந்திர தின விற்பனையில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 15எக்ஸ் 5ஜி போனுக்கு 28 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.22,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த போனுக்கு கேஷ்பேக் சலுகையும் உள்ளது. ஆகவே இந்த மாடலை கம்மி பட்ஜெட்டில் வாங்க முடியும்.

அமேசான் சுதந்திர தின விற்பனை 2026.. ஆஃபரில் ரியல்மி 5ஜி போன்..

ரியல்மி 15எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme 15x 5G specifications): ரியல்மி 15எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 6.8-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1570×720 பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 180Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

தரமான ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core MediaTek Dimensity 6300) சிப்செட் உடன் ரியல்மி 15எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் ஏஆர்எம் மாலி-ஜி57 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் கொண்டுள்ளது இந்த அசத்தலான ரியல்மி போன்.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி உடன் ரியல்மி 15எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ரியல்மி ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

அதுவும் ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ரியல்மி 15எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) கொண்டுள்ளது இந்த போன்.

அதேபோல் 50எம்பி (Sony IMX852 sensor) டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ரியல்மி 15எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. அக்வா ப்ளூ, மரைன் ப்ளூ மற்றும் மெரூன் ரெட் நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

அமேசான் சுதந்திர தின விற்பனை 2026.. ஆஃபரில் ரியல்மி 5ஜி போன்..

குறிப்பாக IP68 & IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டுள்ளது ரியல்மி 15எக்ஸ் 5ஜி போன். அதேபோல் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் வெளிவந்துள்ளது ரியல்மி 15எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் எடை 212 கிராம் எடை ஆகும்.

மேலும் 7000mAh பேட்டரி உடன் ரியல்மி 15எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 60W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், க்ளோனாஸ், கலிலியோ, யூ.எஸ்.பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் அல்ட்ரா லீனியர் பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர் ஆதரவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
realme 15X 5G available at 26 percent discount in Amazon Great Freedom sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X