போட்டான் பாரு போடு.. 7000mAh பேட்டரி.. 60W சார்ஜிங்.. 144Hz டிஸ்பிளே.. ஆஃபர் விலையில் Realme 5ஜி போன்!
இந்திய மார்கெட்டில் பட்ஜெட் விலையில் வெளியான ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி கிடைக்கிறது. இதில் 7000mAh பேட்டரி, 60W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 144Hz டிஸ்பிளே போன்ற பீச்சர்களுடன் அறிமுகமான ரியல்மி 15எக்ஸ் 5ஜி (Realme 15X 5G) ஸ்மார்ட்போனும் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ரியல்மி 15எக்ஸ் 5ஜி போனின் தள்ளுபடி விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 5 சதவீத டிஸ்கவுண்ட் போக ரூ.17,999 பட்ஜெட்டில் இந்த ரியல்மி 15எக்ஸ் 5ஜி போன் வாங்க கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,500 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.16,499 விலைக்கு வாங்க கிடைக்கிறது. இந்த விலைக்கு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டை வாங்கி கொள்ளலாம்.

ரியல்மி 15எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme 15X 5G Specification): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் கொண்ட மாடலாக இந்த ரியல்மி 15எக்ஸ் 5ஜி போன் அறிமுகமாகி இருக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்டுள்ளது. 2 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட்டை கொடுத்துள்ளது.
ஆர்ம் மாலி ஜி57 ஜிபியு (Arm Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது. இந்த ரியல்மி 15எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) வருகிறது. கேமிங் மற்றும் ஓடிடிகளுக்கு தரமான அவுட்புட் கொடுக்கும்படி 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுத்துள்ளது. மேலும், 6.8 இன்ச் (1570 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொடுத்துள்ளது.
எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட்டை இந்த ரியல்மி போன் கொண்டுள்ளது. மேலும், 1200 நிட்ஸ் பீக் பிரைட்ன்ஸ் கொண்ட மாடலாக இருக்கிறது. இந்த விலைக்கு அதிக ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் செகண்டரி கேமரா உள்ளது. சோனி ஐஎம்எக்ஸ்852 (Sony IMX852) கொண்டுள்ளது.
மேலும், செல்பீகள் மற்றும் வீடியோ கால்களுக்கு 50 எம்பி செல்பீ கேமரா கேமரா கொடுக்கிறது. செல்பீ கேமராவுக்கு ஓம்னிவிஷன் ஓவி50டி40 (OV50D40) சென்சாரை இந்த ரியல்மி 15எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. மேலும், அண்டர்வாட்டரில் போட்டோகிராபி மற்றும் வீடியோகிராபி செய்து கொள்ளலாம். இதற்கான ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது.
ஆகவே, இந்த ரியல்மி 15எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுக்க MIL-STD 810H சர்டிபிகேஷன் கொண்டுள்ளது. 60W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7000mAh பேட்டரி கொண்ட மாடலாக இந்த ரியல்மி 15எக்ஸ் 5ஜி வெளியாகி இருக்கிறது.
சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor), பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom Ported Speaker) கொடுத்துள்ளது. அக்வா ப்ளூ (Aqua Blue), மரைன் ப்ளூ (Marine Blue) மற்றும் மெரூன் ரெட் (Maroon Red) ஆகிய மூன்று கலர்களில் வாங்க கிடைக்கிறது. ஏஐ லேண்ட்ஸ்கேப் (AI Landscape), ஏஐ எரைசர் 2.0 (AI Eraser 2.0) மற்றும் ஏஐ மோஷன் டீபிளர் (AI Motion Deblur) உள்ளது.
மேலும், ஏஐ கிளார் ரீமூவர் (AI Glare Remover), ஏஐ அல்ட்ரா கிளாரிட்டி 2.0 (AI Ultra Clarity 2.0), ஏஐ பூஸ்ட் மற்றும் மினி கேப்சூல் (Mini Capsul) உள்ளிட்ட பீச்சர்களை கொடுத்துள்ளது. 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ (5G SA / NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) மற்றும் ஜிபிஎஸ் (GPS) கனெக்டிவிட்டி கொண்ட மாடலாக இது இருக்கிறது.


Click it and Unblock the Notifications








