பிச்சிக்குது ஆர்டர்.. வெறும் ரூ.18,890 போதும்.. 7000mAh பேட்டரி.. 60W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் ரியல்மி 15டி 5ஜி (Realme 15T 5G) ஸ்மார்ட்போனுக்கு பட்டையை கிளப்பும்படி தள்ளுபடி கிடைக்கிறது. பேட்டரி கேபாசிட்டி அதிகமாக விரும்பும் ஸ்மார்ட்போன் பிரியர்களை கண்ணை மூடிக்கொண்டு ஆர்டர் செய்யும்படி 7000mAh பேட்டரி கிடைக்கிறது. இதுபோக 60W ஃபாஸ்ட் சார்ஜிங், அமோலெட் டிஸ்பிளே, அண்டர்வாட்டர் போட்டோகிராபி கேமரா கிடைக்கிறது. இந்த ரியல்மி 15டி 5ஜி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.20,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்தால், ரூ.2,190 உடனடி டிஸ்கவுண்ட் போக ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த டிஸ்கவுண்ட்டை பெறுவதற்கு ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்த வேண்டும். ஆகவே, ரூ.18,890 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

ரியல்மி 15டி அம்சங்கள் (Realme 15T Specifications): இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 மேக்ஸ் 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6400 Max 6nm) சிப்செட் கிடைக்கிறது. மூன்று ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன.
ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) கிடைக்கிறது. இதில் ஏஐ பீச்சர்கள் பேக் செய்யப்பட்டுள்ளன. ஆகவே, ஏஐ ஸ்மார்ட் லூப் (AI Smart Loop), மினி கேப்சூல் (Mini Capsule) மற்றும் சர்க்கிள் டூ சர்ச் (Circle to Search) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 50 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா கிடைக்கிறது.
இந்த கேமராவில் ஏஐ எடிட் ஜீனி (AI Edit Genie) மட்டுமல்லாமல், அண்டர் வாட்டர் (Underwater), டூயல் வியூ வீடியோ (Dual-view Video), சினிமாடிக் (Cinematic), டில்ட்-ஷிப்ட் (TILT-SHIFT) மற்றும் ஏஐ லேண்ட்ஸ்கேப் (AI Landscape) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. 1080p வீடியோ ரெக்கார்ட்டிங் செய்து கொள்ளலாம். 30FPS தரத்தில் 720p ரெக்கார்டிங் உள்ளது.
இந்த ரியல்மி 15டி ஸ்மார்ட்போனில் 7000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 60W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) மட்டுமல்லாமல், பைபாஸ் சார்ஜிங் (Bypass Charging) சார்ஜிங் கிடைக்கிறது. இதுபோக ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 1 மணி நேரத்துக்கு கேம்பிளே கொடுக்கும்.
6.57 இன்ச் (2372 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மற்றும் அதில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4,000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இதுபோக 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி பெற்று கொள்ளலாம். பிரீமியம் லெவல் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது.
ஏனென்றால், அண்டர் வாட்டர் போட்டோகிராபி கிடைப்பதால், அதற்கு ஏற்ப IP69 ரேட்டிங் மட்டுமல்லாமல், IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோவை கொடுக்கிறது. இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைக்கிறது.
பெரிய 7000mAh பேட்டரி கிடைத்தாலும், வெறும் 7.79 எம்எம் தடிமன் மட்டுமே உள்ளது. அதேபோல 181 கிராம் எடை மட்டுமே கொண்டிருக்கிறது. இந்த ரெட்மி 15டி 5ஜி ஸ்மார்ட்போனில் ப்ளோயிங் சில்வர் (Flowing Silver), சூட் டைட்டானியம் (Suit Titanium) மற்றும் சில்க் ப்ளூ (Silk Blue) ஆகிய கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications








