Home
Mobile

தீபாவளி ஆஃபர் ரெடி.. பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. 60W சார்ஜிங்.. 50MP கேமரா.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனத்தின் பட்ஜெட் மாடலான ரியல்மி 15டி 5ஜி (Realme 15T 5G) ஸ்மார்ட்போனுக்கு பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது. 60W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரி மட்டுமல்லாமல், அமோலெட் டிஸ்பிளே, 50 எம்பி கேமரா மற்றும் IP69 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் போன்ற பீச்சர்களையும் கொடுக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 6400 மேக்ஸ் சிப்செட் கொண்ட இந்த ரியல்மி 15டி 5ஜி ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் தள்ளுபடி விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.20,999 ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.22,999 ஆகவும் இருக்கிறது. மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.24,999 ஆகவும் இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டுக்கு ரூ.2,190 பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது.

தீபாவளி ஆஃபர் ரெடி.. பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. 60W சார்ஜிங்.. மாடல்?

அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டுக்கு ரூ.2,210 பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.18,809 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். மல்டிபிள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஈஎம்ஐ மூலம் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு ரூ.2,200 தள்ளுபடி கிடைக்கிறது. ரூ.11,840 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் உள்ளது. இதற்கு போனஸ் கிடைக்கிறது.

பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு நிகராக IP69 ரேட்டிங் + IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistant ) கொடுக்கிறது. பெரிய பேட்டரி கிடைப்பதால் விசி கூலிங் சிஸ்டம் (VC Cooling System) உள்ளது. இந்த டிசைனில் ப்ளோவிங் சில்வர் (Flowing Silver), சூட் டைட்டானியம் (Suit Titanium) மற்றும் சில்க் ப்ளூ (Silk Blue) ஆகிய மூன்று கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

ரியல்மி 15டி அம்சங்கள் (Realme 15T Specifications): இந்த ரியல்மி மாடலில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.57 இன்ச் (2372 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 4,000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் உள்ளது.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 மேக்ஸ் 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6400 Max 6nm) சிப்செட் மற்றும் இந்த பட்ஜெட் மாடல்களில் அதிகமாக கிடைக்கும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. அதேபோல லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) கிடைக்கிறது. 3 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் கிடைக்கிறது.

மேலும், 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை பெற்று கொள்ளலாம். இந்த ரியல்மி 15டி ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி பிளாக் & ஒயிட் போர்ட்ராய்டு கேமரா கிடைக்கிறது. 50 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 60W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரி கிடைக்கிறது. இதில் பைபாஸ் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 15T With 50MP Camera Available At Rs 18809 in Flipkart Sale Check Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X